தொப்பிக்குள் துட்டு – நக்கீரன் 01.04.2017
தொப்பிக்குள் துட்டு – நக்கீரன் 01.04.2017
ராங் கால் – நக்கீரன் 01.04.2017
ராங் கால் – நக்கீரன் 01.04.2017
‘ஃபெரா’ பொறியில் தினகரன்! – தள்ளிப்போகுமா ஆர்.கே.நகர் தேர்தல்?
ஆர்.கே. நகரிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன்’ என வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தது கழுகார் மெசேஜ். கூடவே, ‘ஃபெரா பொறியில் தினகரன்… தள்ளிப்போகுமா ஆர்.கே. நகர் தேர்தல்?’ என்ற தலைப்பும் வந்தது.
சில நிமிடங்களில், முகத்தில் வியர்வை முத்துகள் படர்ந்த நிலையில் வந்த கழுகாருக்காக ஏ.ஸி-யின் டெம்பரேச்சரை குறைத்தோம். ‘‘ஆர்.கே. நகர் அரசியல் டெம்பரேச்சர் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது’’ என முன்னோட்டம் கொடுத்துவிட்டு, குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்தார் கழுகார்.
“டி.டி.வி.தினகரன் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டோம்.
‘‘அவர் மற்ற வேட்பாளர்களைவிட கூடுதல் நம்பிக்கையோடும், மற்ற வேட்பாளர்களைவிட கூடுதல் டென்ஷனாகவும் இருக்கிறார்” என்றார் கழுகார்.
‘‘டென்ஷனுக்கு என்ன காரணம்?”