ஏன், எதற்கு, எதில்? பயோட்டின்

யோட்டின் என்பது ஒரு வைட்டமின். இதை வைட்டமின் ஹெச் என்றும் அழைப்பார்கள். பி வைட்டமின் வகையைச் சேர்ந்த இது, நாம் உண்ணும் உணவிலிருந்து சக்தியை வெளிப்படுத்த உதவுகிறது. இந்த உயிர்ச்சத்து கண், சருமம், தலைமுடி, கல்லீரல், நகம், நரம்பு மண்டலம் போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. கர்ப்பிணிகளின் கரு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

பயோட்டின் குறைபாட்டால் வரும் பிரச்னைகள்
* தலைமுடி உதிர்தல்
* நகங்கள் உடைதல்
* சருமப் பிரச்னைகள்
* எடை குறைவு
* தசை வலி
* அதிக கொலஸ்ட்ரால்
* மன அழுத்தம்

எவ்வளவு தேவை?
ஒரு நாளைக்கு 30 முதல் 100 மைக்ரோகிராம்.
இந்த வைட்டமின் தண்ணீரில் கரையும் தன்மை உடையதால் எளிதில் ஜீரணிக்கப்பட்டு, சிறுநீரின் வழியே வெளியேறி விடுகிறது.
டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள், பயோட்டின் சத்தை சப்ளிமென்ட்டாகவோ, உணவின் மூலமோ எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பயோட்டின் உள்ள உணவுகள்
* வேர்க்கடலை, முந்திரி, சோயா
* டூனா மற்றும் சால்மன் வகை மீன்கள், முட்டை
* வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ, தக்காளி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, காலிஃபிளவர், காளான்
* கொழுப்பு நீக்கப்பட்ட தயிர்
* முழுத்தானியங்கள்

%d bloggers like this: