புற்றுநோயை விரட்டும் சிட்ரஸ் பழங்கள்

னித்துவமான வாசனை மற்றும் சுவை மூலம் நம்மை  ஈர்ப்பவை சிட்ரஸ் பழங்கள். ஆரஞ்சு, மாண்டரின் ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நார்த்தங்காய், கொழிஞ்சி பழம்,  பம்புலிமாஸ் ஆகியவை சிட்ரஸ் வகையைச் சேர்ந்தவை.

நாம் ஏன் சிட்ரஸ் பழங்களைச்சாப்பிட வேண்டும்?


உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்கள் காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்படுகின்றனர் . இதற்கு முக்கிய காரணம்,  நம்மில் பல பேருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதே ஆகும். சிட்ரஸ் பழங்களில் அசாதாரண அளவுகளில் வைட்டமின் சி, கரோட்டினாய்டு, பாலிபீனால் இருப்பதால்., அவற்றை உண்பதன் மூலம் அல்ர்ஜியால் வரும் சுவாச நோய்கள் கட்டுப்படுத்தப் படுகின்றன.
செல் சிதைவினால் ஏற்படும் நீரிழிவு நோய், இதயநோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கவும், நோய் வந்த பிறகு அவற்றின் பாதிப்புகளைக் குறைக்கவும் தினமும் சிட்ரஸ் பழங்களை உண்ணவேண்டும்
துல்லியமான கண் பார்வைக்கு வைட்டமின் சி மிக அவசியமானது.  கண் நரம்பு செல்கள் நன்கு செயல்பட வைட்டமின் சி, மிக முக்கியமானது என்றும் கண்டுபிடித்துள்ளார்கள். போதுமான அளவு வைட்டமின் சி எடுத்துக்கொள்வதால் கண்புரை அதிகரிப்பதைத் தடுக்க முடியும். கண்புரை  வளர்வதை முற்றிலும் தவிர்க்க முடியா விட்டாலும், சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவதன் மூலம்  புரை வளர்ச்சியைத் தாமதப்படுத்தலாம்
சிட்ரஸ் பழங்களில் உள்ள  ஃபிளேவனாய்டு, லைமோனின் மற்றும் கியூமரின் போன்ற பாலிபீனால்கள்,  இரைப்பைப் புற்றுநோய் , மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், ஈரல் புற்றுநோய் ஆகியவை வருவதையும், பரவுவதையும் கணிசமான அளவு குறைக்கின்றன.
சிட்ரஸ் பழச்சாறு  சிறுநீரின் அமிலத்தன்மையைக் குறைத்து, சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுக்கிறது. சிறுநீரகக்கல்லைக்  கரைப்பதற்கு பொட்டாசியம் சிட்ரேட்  மருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த மருந்து  நம்மில்  சிலருக்கு வாந்தி, குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும். அவர்களுக்கு இயற்கையான சிட்ரேட் உடைய சிட்ரஸ் பழங்களைக் கொடுக்கலாம்.
ஆரஞ்சில், பெக்டின் என்கிற நார்ச்சத்து, உடல்எடை குறைய உதவுகிறது; மலச்சிக்கலை குணமாக்குகிறது; எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக உதவுகிறது.ஆரஞ்சை ஒரு விரைவு உணவு போல் எங்கு, எப்போது வேண்டுமானாலும் எடுத்துச்சென்று உண்ணலாம். ஆரஞ்சு பழச்சாற்றைப் பிழிந்து 30 நிமிடங்களுக்குள் பருகி விடவேண்டும். இல்லாவிடில் அதன் பெரும்பான்மையான வைட்டமின் சி சத்து இழக்கப்படும்.

%d bloggers like this: