Daily Archives: ஏப்ரல் 12th, 2017

ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-மீனம்

மீனம் (பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உயர்ந்த லட்சியத்துடன் வாழ்பவர்களே!

ராகு 6-ம் வீட்டில் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், வருமானம் அதிகரிக்கும். கடன் குறையும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும். செவ்வாய் 3-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், தைரியம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
Continue reading →

ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-கும்பம்

கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம் சதயம், பூரட்டாதி  1,2,3-ம் பாதம்)

விவாதம் செய்வதில் வல்லவர்களே!

உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் இருக்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால், மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். செலவுகளுக்கு ஏற்ற வருமானம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்கிரனும், 3-ம் வீட்டில் சூரியனும் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். Continue reading →

ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-மகரம்

மகரம் (உத்திராடம் 2,3,4-ம் பாதம் திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்)

மற்றவர்களை விமர்சிக்க விரும்பாதவர்களே!

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதி சுக்கிரன் உச்சம் அடைந்திருக்கும் வேளையில் இந்த வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். Continue reading →

ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-தனுசு

தனுசு (மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

நன்மை தீமைககளைப் புரிந்துகொள்பவர்களே!

உங்கள் ராசிக்கு 11-ல் சந்திரன் இருக்கும்போது சந்திரன் பிறப்பதால், கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை வலுப்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சிக்கல்களுக்குப் புதிய அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். Continue reading →

ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-விருச்சிகம்

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் அனுஷம், கேட்டை)

உழைத்து உயர விரும்புபவர்களே!

ராசிக்கு 5-ல் சுக்கிரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.

Continue reading →

ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-துலாம்

துலாம் (சித்திரை 3,4-ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்)

மற்றவர்களை எடைபோடுவதில் வல்லவர்களே!

ராசிக்கு 11-ல் ராகு இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், செல்வம், செல்வாக்குக் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படு வீர்கள். ஆனால், வருடம் பிறக்கும்போது ராசியில் சந்திரன் இருப்பதால், வேலை அதிகரிக்கும். மற்றவர் களை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். Continue reading →

ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-கன்னி

கன்னி (உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்)

தொலைதூர சிந்தனை கொண்டவர்களே!

சந்திரன் 2-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாடு, வெளி மாநிலங்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளால் கௌரவம் உயரும். மகளின் திருமணத்தை நல்லபடி நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். குலதெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். Continue reading →

தலைவலிக்கான சிம்பிள் தீர்வுகள்…

ஈரமான கிரீன் டீ பேக் அல்லது தண்ணீரால் நனைத்த பஞ்சை, மூடிய கண்களின் மேல் ஐந்து நிமிடங்கள் வரை வைக்க வேண்டும்.

Continue reading →

ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-சிம்மம்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்,)

பேச்சால் மற்றவர்களைக் கவர்பவர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், முடியாத காரியத்தையும் முடித்துக்காட்டுவீர்கள். மனதில் தைரியம் பிறக்கும். செவ்வாய் 10-ல் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சிலருக்குப் புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிதாக  சொத்து வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பெரிய பதவிகள் தேடி வரும். Continue reading →

ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-கடகம்

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

மற்றவர்களின் நலனுக்காக உழைப்பவர்களே!

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான குரு பகவானின் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு  பிறப்பதால், நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சந்திரன் 4-ல் இருக்கும்போது புது வருடம் பிறப்பதால், வீடு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் கிடைக்கும். Continue reading →