Advertisements

குழந்தைகளின் பருமனுக்கு ஸ்மார்ட்போன் காரணமா?!

ந்தக் குழந்தையைப் பார்த்தா 12 வயசுப் பொண்ணு மாதிரி தெரியும். ஆனா, அதோட வயசு ஆறுதான்…’ – இப்படி வயதுக்கு மீறிய இரட்டிப்பு வளர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்துக் கொண்டிருப்பதைக் கவனிக்கிறீர்களா?

கொழுகொழு குழந்தைகள்தான் மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் என்று

பொதுப்புத்தியிலேயே விதைக்கப்பட்டு விட்டது. இன்றும் ‘என் குழந்தைக்கு நான் நிறைய சாப்பிடக் கொடுக்கிறேன். ஆனாலும், மெலிந்து இருக்கிறான்/இருக்கிறாள்’ என்று ஒருபுறம் புலம்புகிறார்கள். மறுபுறம், எது நல்ல உணவு என்று புரியாமல், `எல்லாத்தையும் சாப்பிட்டா தான் குழந்தை கொழுகொழுனு நோய் எதிர்ப்புச்சக்தியோட வளர்வாங்க’ என்று பானிபூரி யும் பர்கரும் வாங்கிக் கொடுக் கிறார்கள்.
“காலங்காலமாக நமக்குக் கற்பிக்கப்பட்டவைதான் என் றாலும், அவை சரியா என்பதை தெரிந்துகொள்ளாமல் அப்படியே பின்தொடர்கி றோம். கீரை நல்லது. அதற்காக, மூன்று வேளைகளும் குழந்தைகளுக்குக் கீரையே கொடுத்தால், செரிமானக் கோளாறுதானே ஏற்படும்? அந்தந்த உணவை அதற்குரிய நேரத்தில்தான் சாப்பிட வேண்டும் என்பதும் உணவுப்பழக்கம்தான்! இது புரியா விட்டால், சிறுவயதிலேயே பருமன் போன்ற பிரச்னைகள் நம் குழந்தைகளுக்கு வரக்கூடும்.
குழந்தைகளின் பருமனைத் தடுக்கவும், ஆரோக்கியமாக வாழவும், மனம், மூளை மற்றும் உடல் ஆகியவற்றை சீராக வைத்திருக்கக்கூடிய `ஹோலிஸ்டிக் ஹீலிங்’ என்கிற முழுமையான ஆரோக்கிய முறை தேவை’’ என்கிறார், குழந்தைநல மருத்துவர் ஆர்.எஸ்.ஸ்ரீதர்.

“பருமன் என்பது வாழ்வியல் சம்பந்தப்பட்ட நோய். வெளிநாட்டுக்  குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியக் குழந்தைகள் இடையே பருமன் பிரச்னை அவ்வளவாக இல்லை. உண்மையில், பீட்சா, பர்கர், சாட் மற்றும் கோலா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே பிள்ளைகளின் பருமனுக்குக் காரணம் அல்ல. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சர்க்கரை, பச்சரிசி, மைதா, சுத்திக்கரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவையும் பருமனுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
அதிக கலோரி உள்ள உணவுகளைக் குறைவாகவும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பசும்பால் ஆகியவற்றை சற்று அதிகமாகவும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சிலர், `என் மகள் சரியாகச் சாப்பிட மாட்டாள். அதனால், அவளுக்கு தினமும் ஜூஸ் கொடுக்கிறேன்’ என்று கூறுவார்கள். இது முற்றிலும் தவறு. எந்தப் பழமாக இருந்தாலும், அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும். பழரசங்களாக (சர்க்கரை கலக்காவிட்டாலும்கூட) குடித்தால், கெட்ட கொழுப்புகள் தான் உடலில் சேரும். அதுபோல, சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாகவே உண்ணலாம். குழந்தைகளுக்கான சமையலில் எண்ணெய், மசாலாப் பொருள் களைக் குறைவாகச் சேர்ப்பதே நல்லது.

நல்ல பழக்கவழக்கங்கள் அவசியம்!

இப்போதைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன், ஐபாட் போன்ற சாதனங்களின் பயன்பாடு கூட நம் எடை கூடுவதற்கு வழிவகுக்கிறது.
ஐந்து வயது வரை, குழந்தைகள் இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. இல்லை எனில், உட்கார்ந்தே   விளையாடும் வீடியோ கேம்ஸில் மூழ்கி, வெளியில் விளையாடும் பழக்கத் தையே மறந்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்குமுன், வியர்க்க  விறுவிறுக்க விளையாடுவது, வெயிலில் நிற்பது, கைகளைச் சுத்தமாகக் கழுவுவது போன்ற நல்ல பழக்கவழக்கங்களையும்  அவர்களுக்குக் கற்றுத்தருவது அவசியம்.

மருந்துகள் அடிக்கடி வேண்டாமே!

குழந்தைகள் அடம்பிடித்துக் கேட்கிறார்கள் என துரித உணவுகளை வாங்கிக்கொடுத்துவிட்டு, பிறகு நோய் வந்துவிட்டால் மருந்து கொடுத்து விடலாம் என நினைப்பது தவறானது. நம் உடலை ஆரோக்கியமாகக் காக்கும் வகை யிலான நோய் எதிர்ப்புத்திறன் இயல்பாகவே  நம் உடலுக்கு உள்ளது. ஆகவே, ஆரோக்கிய உணவின் மூலமே நோய்கள் வராமல் தற்காத்துக் கொண்டு கூடுமானவரை மருந்துகளை, தவிர்ப்பது நல்லது.
மனஅழுத்ததால்கூட பருமன் உண்டாகலாம். ஆகவே, குழந்தைகளின் சிந்தனையில் சீரான நேர்மறை எண்ணங்களையே ஊக்குவியுங்கள்!” என்கிறார் ஸ்ரீதர்.

Advertisements
%d bloggers like this: