Advertisements

கோபத்தை தண்ணீரில் கரைக்கலாம்… எப்படி?

ப்போதெல்லாம் உங்களுக்குக் கோபம் வரும்? காலை உணவை வாயில் வைக்க முடியாதபோது? கொடுமையான டிராஃபிக்கில் மாட்டிக்கொள்ளும்போது? அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி உங்களைத் திட்டும்போது? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதைக் கேட்காதபோது? இன்னும் பல காரணங்கள் இருக்கலாம். கோபப்படாத மனிதரென்று யாராவது உண்டா? நிச்சயம் இல்லை. ஆனால், அது நம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டால் அதன் விளைவுகள் ஆபத்தானவை. அப்படிப்பட்ட கோபத்தை எப்படி விரட்டுவது என்று பார்ப்போம்.

* உங்களுக்குக் கோபம் வருகிறமாதிரி யாராவது நடந்துகொண்டால் அவசரப்பட்டுக் கோபத்தைக் காட்டிவிடுவீர்கள். பிறகு வருத்தப்படுவீர்கள். அதனால், ஏதாவது பேசுவதற்கு முன் நாம் சொல்வது சரிதானா என்று ஒருமுறை யோசித்துவிட்டு, கொஞ்சம் அமைதியான பிறகு பேசிப்பாருங்கள்.
* சிறிது தூரம் நடக்கவோ, ஓடவோ செய்யுங்கள். உங்கள் கோபம் குறையும்.
* கோபம் வர என்ன காரணம் என்று தனியாக இருக்கும்போது யோசித்துப் பாருங்கள். அதை எப்படிக் குறைக்கலாம் என்ற தெளிவு பிறக்கும்.
* கோபத்தை நீங்கள் ஏமாற்றலாம். அழகாகப் புன்னகை செய்யப் பழகிக்கொள்ளுங்கள்.
* ஒரு தாளில் நீங்கள் எதற்கெல்லாம் கோபப்பட்டீர்கள் என்று எழுதுங்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு அதைப் படித்துப் பாருங்கள். அது உங்கள் கோபத்தைக் குறைப்பதோடு, மற்றவர்களை நீங்கள் கோபமூட்டுவதையும் தடுக்கும்.
* பத்து வரை எண்ணுங்கள். முடித்த பிறகு, மீண்டும் பத்து முதல் ஒன்று வரை ரிவர்ஸில் எண்ணுங்கள்.
* தண்ணீரில் குதித்து நீச்சல் அடியுங்கள் அல்லது ஷவரைத் திறந்துவிட்டுக் குளியுங்கள். உங்களின்  கோப உணர்வு தண்ணீரோடு அடித்துச் செல்லப்படும்.
* மூன்று முறை ஆழ்ந்த மூச்சு விடுங்கள். அதாவது, உங்கள்   மூச்சை நீங்கள் கவனிக்க வேண்டும்.
* நகைச்சுவைக் காட்சி ஒன்றை உடனே பாருங்கள் அல்லது உங்களுக்குப் பிடித்த நகைச்சுவையை மனதில் அசை போடுங்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: