தலைவலிக்கான சிம்பிள் தீர்வுகள்…

ஈரமான கிரீன் டீ பேக் அல்லது தண்ணீரால் நனைத்த பஞ்சை, மூடிய கண்களின் மேல் ஐந்து நிமிடங்கள் வரை வைக்க வேண்டும்.

* கண்களை மூடி இடது கை கட்டைவிரலின் முதல் ரேகைக்கு மேல் உள்ள பகுதியை, வலது கைவிரல்களால் கேப் (Cap) போல பிடித்துக்கொண்டு 10 நிமிடங்கள் வரை மிதமான அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால், தலைவலி மெள்ள மெள்ள குறையத் தொடங்கும்.

* இரண்டு உள்ளங்கைகளையும் நன்றாகத் தேய்த்து, மிதமான சூடு வந்ததும் கண்களை, அந்தச் சூட்டோடு பொத்திக்கொள்ளவும். மிதமான அழுத்தத்தை, இரண்டு நிமிடங்கள் வரை கொடுக்கலாம்.

* கண்களை மூடிக்கொண்டு ரிலாக்ஸாகச் சாய்ந்து கொள்ளுங்கள்.

* முகத்தில் தண்ணீரை வேகமாகத் தெளித்துக் கழுவினாலும், தலைவலி குறையும்.

* கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து இருந்தால், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து சிறிது தூரம் நடந்துவிட்டு வரலாம்.

%d bloggers like this: