ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-கன்னி

கன்னி (உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்)

தொலைதூர சிந்தனை கொண்டவர்களே!

சந்திரன் 2-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாடு, வெளி மாநிலங்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளால் கௌரவம் உயரும். மகளின் திருமணத்தை நல்லபடி நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். குலதெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

எனினும், வருடம் பிறக்கும்போது செவ்வாய் 9-ல் இருப்பதால், தந்தையுடன் கருத்து மோதல்கள் தோன்றி மறையும். தந்தை வழி சொத்துகளைப் பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் பணம் விரயமாகும். 18.12.17 வரை சனி 3-ல் இருப்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். 19.12.17 முதல் சனி 4-ல் அமர்வதால், தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப் படக்கூடும். சிலருக்கு எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். அக்கம்பக்கத்தவரது ஆதரவு கிடைக்கும்.

1.9.17 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே இருப்பதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காதுவலி வரக்கூடும். கௌரவக்குறைச்சலான சம்பவங்கள் நடைபெறும். ஆனால், 2.9.17 முதல் குரு பகவான் 2-ல் அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைப்பட்டு கிடக்கும் வீட்டுப்பணியைத் தொடர, வங்கிக்கடன் கிடைக்கும்.

14.2.18 முதல் 13.4.18 வரை குரு வக்கிரத்திலும் அதிசாரத்திலும் உங்கள் ராசிக்கு 3-ல் அமர்வதால், மூச்சுத்திணறல், தூக்கமின்மை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.

26.7.17 வரை ராகு 12-ல் நீடிப்பதால், உடல்நலம் சீராகும். கேது 6-ல் இருப்ப தால், திடீர் பணவரவு உண்டு. கடன் பிரச்னை தீரும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக் குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 27.7.17 முதல் ராகு 11-ல் அமர்வதால், செயலில் வேகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடிவரும். சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

ஆனால், 27.7.17 முதல் கேது 5-ல் அமர்வதால், மகளின் திருமணத்துக் காக கடன் வாங்க நேரிடும். பிள்ளை களின் கல்வி, உத்தியோகம் போன்ற முயற்சிகளில் தடைகள் ஏற்படக்கூடும்.

7.2.18 முதல் 2.3.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படக் கூடும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல் நலம் பாதிக்கும்.

28.8.17 முதல் செவ்வாயின் போக்கு சாதகமாக இல்லாததால், பூர்விகச் சொத்து பிரச்னைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண்பது நல்லது. சகோதரர்களுடன் மனவருத்தம் உண்டாகும். மனம், அமைதி இல்லாமல் தவிக்கும்.

வியாபாரத்தில், புது ஏஜென்சி எடுப்பீர்கள். செப்டம்பர் மாதம் முதல் சிலர் புதிய துறையில் முதலீடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களது ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். சினிமா, சிமென்ட், பெட்ரோ புராடக்ட்ஸ், மருந்து வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில், சூழ்ச்சிகளைக் கடந்து முன்னேறுவீர்கள். நவம்பர் மாதம் முதல் அதிரடியான முன்னேற்றம் உண்டு. பொறுப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். 19.12.17 முதல் சனி 4-ல் அமர்வதால், சக ஊழியர்களால் பிரச்னை உண்டாகும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன், சட்ட நிபுணர்களை ஆலோசிக் கவும். மாணவ – மாணவிகளுக்கு, படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கமும் பாராட்டும் கிடைக்கும்.

கலைத் துறையினருக்கு, வேற்று மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். விமர்சனங்களைக் கடந்து சாதிப்பார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களைச் சுறுசுறுப்பாகச் செயல்படச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்தித் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள அங்கமங்கலம் என்ற ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீநரசிம்ம சாஸ்தாவை வணங்கிட, நன்மை உண்டாகும்.

%d bloggers like this: