ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-துலாம்

துலாம் (சித்திரை 3,4-ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்)

மற்றவர்களை எடைபோடுவதில் வல்லவர்களே!

ராசிக்கு 11-ல் ராகு இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், செல்வம், செல்வாக்குக் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படு வீர்கள். ஆனால், வருடம் பிறக்கும்போது ராசியில் சந்திரன் இருப்பதால், வேலை அதிகரிக்கும். மற்றவர் களை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

சனி பகவான் 18.12.17 வரை 2-ல் பாதச் சனியாகத் தொடர்வதால், குடும்பத்தில் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது. குடும்ப விஷயங் களை வெளியில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டாம். ஆனால், 19.12.17 முதல் சனி 3-ல் அமர்வதால், பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். எதிர்பார்த்தத் தொகை கைக்கு வரும்.

1.9.17 வரை குரு பகவான் 12-ல் இருப்பதால், எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். அவ்வப்போது உடல்நலனும் பாதிக்கப்படக்கூடும்.  2.9.17 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே ஜன்ம குருவாக அமர்கிறார். முன்கோபத்தால் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குருவின் பார்வை பலத்தால் சில அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

14.2.18 முதல் 13.4.18 வரை வக்கிரத்திலும் அதிசாரத்திலும் குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனக் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். செலவுகளைக் கட்டுப்படுத்து வீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

26.7.17 வரை கேது 5-ல் தொடர்வ தால், தூக்கம் குறையும். பிள்ளைகளைப் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் மனவருத்தம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 27.7.17 முதல் கேது 4-ல் அமர்வதால், தாயாரின் உடல்நலம் பாதிக்கும். காரியங்களில் தடை, தாமதங்கள் உண்டாகும். மேலும் 27.7.17 முதல் ராகு 10-ல் அமர்வதால், வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வழக்குகளில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

2.3.18 முதல் 26.3.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக் கூடும்; கவனம் தேவை.

14.4.17 முதல் 27.5.17 வரை செவ்வாய் 8-லும், பிறகு 15.10.17 முதல் 4.12.17 வரை செவ்வாய் 12-லும் மறைவதால், சகோதரர்களால் மன வருத்தம் உண்டாகும். வீடு, மனை வாங்கும்போது வில்லங்கம் எதுவும் இல்லாமல் இருக்கிறதா என்று சரிபார்த்து வாங்கவும். அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வெளியூர்களுக்குச் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில், எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். பங்குதாரர் களுடன் சுமுகமான உறவு ஏற்படும். புதிய திட்டங்களை செயல்படுத்து வீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். வெளிநாடு, வெளி மாநிலங் களில் இருப்பவர்கள் உதவியாக இருப்பார்கள். ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகத்தில், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆனாலும், அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஒருபக்கம் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், மறுபக்கம் பிரச்னைகளும் ஏற்படவே செய்யும்.

மாணவ – மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கல்விச் சுற்றுலா சென்று வருவார்கள். பழைய நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைக்கும். சாதனைகள் தொடரும்.  கலைத் துறையினருக்கு, இந்தப் புத்தாண்டில் வருமானம் உயரும். அவர்களது படைப்புகள் பரிசு, பாராட்டுகள் பெறும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு,   இதுவரையிலும் விரக்தியின் விளிம்பில் நின்ற உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

பரிகாரம்

காரைக்குடிக்கு அருகில் உள்ளது இலுப்பைக்குடி. இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசவுந்தரநாயகி உடனுறை ஸ்ரீதான்தோன்றி ஈஸ்வரரையும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரையும் வழிபட்டு வந்தால், வெற்றி உண்டாகும்.

%d bloggers like this: