ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-விருச்சிகம்

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் அனுஷம், கேட்டை)

உழைத்து உயர விரும்புபவர்களே!

ராசிக்கு 5-ல் சுக்கிரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.

வருடம் பிறக்கும்போது சந்திரன் 12-ல் இருப்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவு களைக் கட்டுப்படுத்துவது அவசியம். நீண்டகாலமாகச் செல்ல நினைத்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

1.9.17 வரை குரு பகவான் 11-ல் இருப்பதால், திடீர் யோகம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளை களின் பிடிவாதப்போக்கு மாறும். ஆனால், 2.9.17 முதல் குருபகவான் 12-ல் மறைவதால், எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் காரணமாக அவர்களைப் பிரிய நேரிடும். 14.2.18 முதல் 13.4.18 வரை வக்கிரகதியிலும் அதிசாரத்திலும் குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே இருப்பதால், வீண் அலைக்கழிப்புகள் குறையும். பேச்சில் பொறுமை அவசியம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடும் அவசியம்.

சனி பகவான் 18.12.17 வரை உங்கள் ராசிக்குள்ளேயே இருப்பதால், தடுமாற்றம், மறதி, ஏமாற்றங்கள் ஏற்படக் கூடும். மூட்டுவலி, ரத்த அழுத்தம் வந்து நீங்கும். கடனை நினைத்து கவலை உண்டாகும்.வழக்கு விஷயத்தில் தகுந்த ஆலோசனையுடன் செயல்படுங்கள். 19.12.17 முதல் சனி 2-ல் அமர்வதால், பணம் கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். மற்றவர்களுக்கு உறுதிமொழி தருவதைத் தவிர்க்கவும்.

26.7.17 வரை ராகு 10-லும் கேது 4-லும் இருப்பதால், மனதில் இனம் தெரியாத கலக்கம், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். எடுத்த வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். சிக்கலான காரியங் களில் ஈடுபடவேண்டாம். மற்றவர் களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம்.

27.7.17 முதல் கேது 3-ல் அமர்வ தால், தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். வீண் விவாதங்கள், சண்டைச் சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் இப்போது வலிய வந்து பேசுவார்கள்.

ஆனால், ராகு 9-ல் அமர்வதால், அதிகரிக்கும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். அடிக்கடி டென்ஷன் உண்டாகும். தந்தையின் உடல் நலனில் சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

26.5.17 முதல் 30.8.17 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், மன இறுக்கமும், எதிர்காலம் பற்றிய அச்ச மும் உண்டாகும். எந்த ஒரு காரியத்தை யும் போராடித்தான் முடிக்கவேண்டி வரும். சகோதரர்களால் அலைச்சல் உண்டாகும்.

வியாபாரத்தில், ஆவணி, புரட்டாசி மாதங்களில் விற்பனை அதிகரிக்கும். அனுபவம் மிக்க வேலையாட்கள் பணியில் இருந்து விலகுவார்கள். பங்குதாரர்களிடம் சுமுகமாக நடந்து கொள்ளவும்.

தை, மாசி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குனி மாதத்தில் வெளிநாட்டுத் தொடர்புடைய நபர் பங்குதாரராக இணைவார். உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். ஆவணி மாதம் புது வாய்ப்புகள் வரும். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில சிறப்பு பொறுப்புகளையும் ஒப்படைப் பார்கள். பங்குனி மாதத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

மாணவ – மாணவிகளுக்குத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக் கும். போட்டிகளில் பரிசு உண்டு. கலைத் துறையினருக்குப் பெரிய நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை மேலும் மேலும் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்

கரூர் மாவட்டம் வெண்ணெய் மலையில் அருளும் ஸ்ரீபால சுப்ரமணியரை, சஷ்டி திதி அல்லது பூசம் நட்சத்திர நாளில் வணங்கி வாருங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.


%d bloggers like this: