ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-மகரம்

மகரம் (உத்திராடம் 2,3,4-ம் பாதம் திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்)

மற்றவர்களை விமர்சிக்க விரும்பாதவர்களே!

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதி சுக்கிரன் உச்சம் அடைந்திருக்கும் வேளையில் இந்த வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள்.

உங்கள் ராசிக்கு 10-ல் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு பலன் கிடைக்கும். நல்ல சம்பளத் துடன் புது வேலை அமையும். சிலருக்கு அயல் நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும்.

1.9.17 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-வது வீட்டில் தொடர்வதால் உங்களது அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். ஆனால், 2.9.17 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் அமர்வதால், சிறுசிறு அவமானங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் குற்றம், குறைகளை அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டாம். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். 14.2.18 முதல் 13.4.18 வரை உள்ள காலக்கட்டத்தில் குருபகவான் வக்கிரகதியிலும், அதிசாரத்திலும் லாப வீட்டில் அமர்வதால், அது முதல் தொட்டது துலங்கும். 

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் நிற்பதால், அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். பேச்சில் கனிவு தேவை. யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடவேண்டாம். 27.7.17 முதல் இந்த வருடம் முடியும் வரை ராசிக்கு 7-ல் ராகுவும், ராசிக்குள்ளேயே கேதுவும் அமர்வதால், ஆன்மிக விழாக் களில் முதல் மரியாதை கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 18.12.17 வரை லாப வீட்டில் தொடர்வ தால், திடீர் பணவரவால் பழைய கடனையெல்லாம் தந்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.  19.12.17 முதல் சனி 12-ல் மறைந்து விரயச் சனியாக வருவதால், வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். இளைய சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துக்கொள்வார்கள். எந்த விஷயத்திலும் பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது.

26.7.17 முதல் 21.8.17 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். 28.8.17 முதல் 15.10.17 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், மன இறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படும்.

வியாபாரத்தில் தொட்டது துலங் கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  வேலையாட்களின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.  வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு கூடும். சித்திரை, வைகாசி, ஆனி, பங்குனி  மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். சந்தை நுணுக்கங் களை கற்றுக்கொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். மார்கழி, தை மாதங்களில் லாபம் குறையும். பங்குதாரர்களுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். கூட்டுத் தொழில் வேண்டாம்.   

உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். வைகாசி, ஆனி மாதங் களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. புது வாய்ப்புகளும் வரும். இழந்த சலுகைகளை, பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். மார்கழி, தை மாதங்களில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். மேல் அதிகாரியிடம் வளைந்துகொடுத்துப் போகவும்.

மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்துகொள்வார்கள். கவிதை, கட்டுரைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள்.

கலைத் துறையினர், புதிய வாய்ப்புகளால் அதிகம் சம்பாதிப்பார்கள்.வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவார்கள். விருது கிடைக்கும். 

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, எடுத்த காரியங்களை முடித்துக் காட்டும் வல்லமையைத் தருவதாக அமையும்.

பரிகாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேவசமுத்திரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயரை, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று வழிபடுங்கள். எதிலும் வெற்றி உண்டாகும்.

%d bloggers like this: