ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-மீனம்

மீனம் (பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உயர்ந்த லட்சியத்துடன் வாழ்பவர்களே!

ராகு 6-ம் வீட்டில் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், வருமானம் அதிகரிக்கும். கடன் குறையும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும். செவ்வாய் 3-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், தைரியம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ஆனால், சந்திரன் 8-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், எளிதாக முடிய வேண்டிய விஷயங் களைக் கூட கொஞ்சம் சிரமப்பட்டு முடிப்பீர்கள்.

1.9.17 வரை உங்களின் ராசிநாதனாகிய குரு 7-வது வீட்டிலேயே தொடர்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்ல வேலையும் கிடைக்கும். 2.9.17 முதல் 13.2.18  வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால், வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலைகள் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாக நடத்துக் கொள்ளுங்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.

14.2.18 முதல் 13.4.18 வரை 9-ம் வீட்டில் குரு அமர்வதால், இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்றுபோன வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

16.9.17 முதல் 10.10.17 வரை சுக்கிரன் 6-ல் அமர்வதால், கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும். 1.12.17 முதல் 20.1.18 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால், சகோதரர்களுடன் கருத்துமோதல்கள் வரும். செலவுகள் அதிகமாகும். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

26.7.17 வரை கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்ப தால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக் கும். ஆனால், 27.7.17 முதல் இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது அமர்வதால், எதிர்பார்த்த பணம் வரும். வழக்குகள் சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் மூலமாக சில காரியங் களை சாதிப்பீர்கள். ஆனால் 5-ல் ராகு நிற்பதால், பூர்வீகச் சொத்தில் சட்டச் சிக்கல் வரும்.

சனி பகவான் 18.12.17 வரை 9-ம் வீட்டில் நீடிப்பதால், வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். சிலருக்கு, தந்தையுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.

19.12.17 முதல் 13.4.18 வரை 10-ம் வீட்டில் அமர்வதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளி வட்டாரங் களிலும் நண்பர்கள் மத்தியிலும் உங்களது செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

வியாபாரத்தில் தள்ளுபடி விற்பனை மூலம் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆவணி மாதங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள்.  பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போகவும். மார்கழி, தை மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். அயல்நாட்டுத் தொடர்புடைய புது பங்குதாரர்கள் உங்களுடன் இணைய வாய்ப்பு உண்டு. உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.  

உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில கூடுதல் சிறப்புப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

மாணவ-மாணவிகளுக்கு  தேர்வில் வெற்றியும் அதிக மதிப்பெண் ணும் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவும் அரவணைப்பும் அதிகரிக்கும். கவிதை, கட்டுரை, விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்வார்கள்.
கலைத் துறையினருக்கு பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும். வீண் வதந்திகளில் இருந்து விடுபடுவார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களின் சாதனைகளை அதிகப் படுத்துவதுடன், அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்

திருச்சி, லால்குடிக்கு அருகிலுள்ளது மணக்கால். இந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசுப்ரமணிய சுவாமியை, சஷ்டி திதி நாள்களில் சென்று தரிசித்து  வழிபடுங்கள். மேலும் சாதிப்பீர்கள்.

%d bloggers like this: