ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-கடகம்

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

மற்றவர்களின் நலனுக்காக உழைப்பவர்களே!

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான குரு பகவானின் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு  பிறப்பதால், நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சந்திரன் 4-ல் இருக்கும்போது புது வருடம் பிறப்பதால், வீடு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் கிடைக்கும்.

செவ்வாய் 11-ல் அமர்ந்திருப்பதால், பெற்றோருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலருக்கு, நல்ல வேலை கிடைக்கும். ராசிக்கு 9-ல் சுக்கிரனும் புதனும் அமர்ந்திருப்பதால், வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். 

1.9.17 வரை குரு 3-ல் தொடர்வதால், பணத்தட்டுப் பாடும் தவிர்க்கமுடியாத செலவுகளும் இருக்கும். சின்னச் சின்ன வேலைகளும் தடைப்பட்டு முடியும். 2.9.17 முதல் குரு பகவான் 4-ல் அமர்வதால், அலைச்சலும் ஏமாற்றங்களும் ஏற்படும். தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். 14.2.18 முதல் 13.4.18 வரை குருபகவான் வக்கிரத்திலும் அதிசாரத்திலும் 5-ல் அமர்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளின் திருமணம் கூடிவரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய சொத்து வாங்குவீர்கள்.

18.12.17 வரை சனி பகவான் 5-ல் இருப்பதால், உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும் என்பதால், அவர்களை அனுசரித்துச் செல்லவும். எந்த விஷயத்திலும் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். 19.12.17 முதல் சனி 6-ல் அமர்வதால், வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பதவி களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு, வெளி மாநிலம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடை நீங்கும். வழக்கு சாதகமாகும். வருமானம் உயரும்.

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் இருப்ப தால், பேச்சில் பொறுமையைக் கடைப் பிடிக்கவும். எந்த ஒரு விஷயத்தையும் நீங்களே நேரடியாகச் செய்து முடிப்பது நல்லது. கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னை வந்து போகும். இரவுநேரப் பயணங்களைத் தவிர்க்கவும்.

27.7.17 முதல் ராகு 1-லும் கேது 7-லும் தொடர்வதால், உணவு விஷயத் தில் கட்டுப்பாடு தேவை. வாழ்க்கைத் துணைவர் உங்களது குறைகளைச் சுட்டிக்காட்டினால், பொறுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

26.5.17 முதல் 28.8.17 வரை செவ்வாய் 12-ல் மறைவதால், சிறு சிறு விபத்துகள், பொருள் இழப்புகள், ஏமாற்றங்கள் ஏற்படலாம். சகோதர – சகோதரிகளுடன் மனவருத்தம் உண்டாகும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். 22.12.17 முதல் 14.1.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் சலசலப்புகள் எழும்; வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும்.

வியாபாரத்தில், தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பி-க்களின் தொடர்பால் வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும்.வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வருவார்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனி, மாசி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. உங்களை தரக் குறைவாக நடத்திய அதிகாரியின் மனம் மாறும். சிலருக்கு, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும். கணினி துறையைச் சேர்ந்தவர் களுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

மாணவ – மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்யுங்கள். கலைத் துறையினர், விமர்சனங்களையும் கடந்து முன்னேறுவார்கள். உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாட வாய்ப்பு உண்டு. திரைக்கு வரமுடியாமல் இருந்த உங்களின் படைப்புகள் வெளியாகி வெற்றி பெறும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கை யாலும் உங்களைச் சாதிக்கவைப்பதாக  அமையும்.

பரிகாரம்

அறந்தாங்கிக்கு அருகிலுள்ளது துரையரசபுரம். இங்குள்ள ஸ்ரீகாதமறவர் காளியம்மன் ஆலயத்துக்கு, வெள்ளிக் கிழமைகளில் சென்று குங்குமார்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். மகிழ்ச்சி கூடும்.

%d bloggers like this: