Advertisements

ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-ரிஷபம்

ரிஷபம் (கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்)

வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்களே!

சந்திரன் 6-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், திடீர் பயணங்கள் உண்டு. ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

1.9.17 வரை குரு உங்கள் ராசிக்கு 5-வது வீட்டிலேயே தொடர்வதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். பிள்ளைகளுடைய உயர்கல்வி அல்லது உத்தியோகம் குறித்த முயற்சிகள் வெற்றியடையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆனால், 2.9.17 முதல் குரு 6-ல் மறைவதால், சேமிப்புகள் குறைந்து கடன்சுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.

14.2.18 முதல் 13.4.18 வரை குரு அதிசாரத்திலும் வக்கிரகதியிலும் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து, உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பணத் தட்டுப்பாடு நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பும், பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வும் கிடைக்கும்.

18.12.17 வரை சனி 7-வது வீட்டில் இருப்பதால், வாழ்க்கைத்துணைக்குச் சிறிய அளவில் ஆரோக்கிய பாதிப்பு உண்டாகும். மேலும் 19.12.17 முதல் அஷ்டமத்துச் சனி தொடங்குவதால், பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம். வழக்குகளில் கவனம் தேவை. சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசி தீர்க்கவும்.

26.7.17 வரை ராகு 4-ல் இருப்பதால், தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கும். தாய்வழிச் சொத்துகளைப் பெறுவதில் தடைகள் ஏற்படக்கூடும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். 27.7.17 முதல் ராகு உங்கள் ராசிக்கு 3-ல் அமர்வதால், குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். 26.7.17 வரை கேது 10-ல் தொடர்வதால், வேலைகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். தேவையில்லாத இடமாற்றம் ஏற்படக் கூடும். 27.7.17 முதல் கேது 9-ல் சென்று அமர்வதால், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும்.

11.3.18 முதல் 13.4.18 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், வீடு, மனை வாங்குவது விற்பதில் எச்சரிக்கை அவசியம். சகோதரர் களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். பணம் கொடுக்கல் – வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் புதன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், பிள்ளைகள் சாதிப்பார்கள்.

வியாபாரத்தில் ஆகஸ்ட் மாதம் வரை லாபம் அதிகரிக்கும். ஆனால், சனி 7-லும் தொடர்ந்து 8-லும் தொடர இருப்பதால், வியாபார ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளா தீர்கள். பங்குதாரர்களுடன் மனத் தாங்கல் ஏற்படக் கூடும். ஒரு சிலருக்கு தனியாக வியாபாரம் செய்யவேண்டிய நிலையும் உண்டாகும். உங்களுக்கு அனுபவம் இல்லாத துறைகளில் இறங்க வேண்டாம். செப்டம்பர் 6 முதல் குரு 6-ல் மறைவதால், எதிலும் எச்சரிக்கை தேவை. வாகனம், போர்டிங், லாட்ஜிங், கமிஷன் வகை களால் லாபம் அதிகரிக்கும். தெலுங்கு, இந்தி பேசுபவர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை சலுகைகள் கிடைக்கக்கூடும். அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செப்டம்பர் முதல் பிப்ரவரி முற்பகுதி வரை வேலைச் சுமையும் அலைச்சலும் இருக்கும். பிப்ரவரி மாதக் கடைசி முதல் ஏப்ரல் வரை பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம். 19.12.17 முதல் அஷ்டமத்துச் சனி தொடர்வதால், வேலை அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும் என்று நம்பி எவரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்.

சனி பகவான் 7-ல் இருப்பதால், மாணவ – மாணவிகள் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருக்க வும். நல்ல வாய்ப்புகள் வரும். பாதியில் நின்றிருந்த பணிகள் வெற்றிகரமாகப் பூர்த்தியாகும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, செலவுகளைத் தருவதாக இருந்தாலும், வருடத்தின் இறுதிப்பகுதி மகிழ்ச்சி தருவதாக அமையும்.

பரிகாரம்

தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீதீர்த்த கிரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

Advertisements
%d bloggers like this: