Advertisements

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-மேஷம்

மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே!
சுக்கிரன் ராசிக்கு 12-ல் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் ஹேவிளம்பி புத்தாண்டு பிறப்பதால், வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தேவையான வங்கிக் கடனும் கிடைக்கும். குருபகவான் 1.9.17 வரை 6-வது வீட்டில் மறைந்திருப்பதால், செலவுகளும் கடன் பிரச்னைகளும் இருந்தபடி இருக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், வெளிநாட்டுப் பயணம் போன்ற விஷயங்கள் சற்று தடைபட்டே முடியும்.

ஆனால், 2.9.17 முதல் 13.2.18 வரை குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பழைய கடன்கள் தீரும். 14.2.18 முதல் 13.4.18 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்கிரகதியிலும் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் அமர்வதால், பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். 26.7.17 வரை உங்களுடைய ராசிக்கு 11-ல் கேது இருப்பதால், பிரபலங்களின் உதவியால் முன்னேற்றம் காண்பீர்கள். கணிசமான பணவரவு உண்டு.
26.7.17 வரை ராகு 5-வது வீட்டிலேயே அமர்ந்திருப்ப தால், பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங் களும் இருந்துகொண்டேயிருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் அவசரம் வேண்டாம். 27.7.17 முதல் ராகு 4-ல் தொடர்வதால், தாயாரின் உடல்நலன் பாதிக்கப் படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்களும், பிரச்னைகளும் வரும். 27.7.17 முதல் வருடம் முடியும் வரை கேது 10-ல் அமர்வதால், உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் உண்டாகும்.
18.12.17 வரை சனிபகவான் அஷ்டமச் சனியாகத் தொடர்வதால், அவ்வப்போது மனச்சலனமும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். பணம் கொடுக்கல் – வாங்கலில் எச்சரிக்கை தேவை. 19.12.17 முதல் வருடம் முடியும் வரை சனிபகவான் 9-வது வீட்டில் வந்து அமர்வதால், காரியத் தடைகள் விலகும். மனக் கவலைகள் நீங்கும். எனினும், தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
14.4.17 முதல் 26.5.17 வரை சனியும், செவ்வாயும் நேருக்கு நேர் பார்வையிடுவதாலும், 12.7.17 முதல் 30.8.17 வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் நீச்சமாகி இருப்பதாலும், 20.1.18 முதல் 10.3.18 வரை செவ்வாய் எட்டில் மறைவதாலும், 11.3.18 முதல் 13.4.18 வரை சனியும், செவ்வாயும் ஒன்று சேருவதாலும்  இந்தக் காலக் கட்டத்தில் வீடு, மனை வாங்குவது விற்பதில் எச்சரிக்கை தேவை.சகோதரர்களுடன் மோதல்கள் எழலாம்.சிலருக்கு சிறு அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அனுமனை வழிபடுவது நல்லது.
10.10.17 முதல் 5.11.17 வரை உள்ள காலக்கட்டத்தில் சுக்கிரன் 6-வது வீட்டில் சென்று மறைவதால், கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல் வந்து போகும். 17.11.17 முதல் 15.12.17 வரை சூரியனும் சனியும் 8-ல் சேர்ந்திருப் பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளிலும், பிள்ளைகளின் திருமண விஷயத்திலும் பொறுமை அவசியம்.
வியாபாரத்தில் 2.9.17 முதல் குரு பகவான் 7-ல் அமர்வதால், புதிய முதலீடுகள் செய்வீர்கள். பங்குதாரர் களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பெரிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உணவு, கெமிக்கல், வாகனம், கன்ஸ்ட்ரக்‌ஷன் வகைகளில் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை வேலைச்சுமை இருக்கும். செப்டம்பர் மாதம் முதல் குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் பதவி, சம்பள உயர்வு, கூடுதல் சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கும் முயற்சி செய்யலாம்.
மாணவ-மாணவிகளுக்கு செப்டம்பர் முதல் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவார்கள். கலைத் துறையினருக்குத் தடைப்பட்டிருந்த வேலைகள் செப்டம்பர் முதல் விரைந்து முடியும். வேற்றுமொழிப் பட வாய்ப்பு களால் புகழ் பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும், மையப்பகுதி பணவரவைத் தருவதாகவும், இறுதிப்பகுதி சுபச் செலவுகளை ஏற்படுத்துவதாகவும்  அமையும்.

பரிகாரம்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டு வாருங்கள்.  நீங்கள் தொட்டது துலங்கும்.

Advertisements
%d bloggers like this: