Daily Archives: ஏப்ரல் 12th, 2017

ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-மிதுனம்

மிதுனம் (மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்)

நேருக்குநேராகப் பேசுபவர்களே!

ராசிக்கு 6-ல் சனி வலுவாக இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், பல சாதனைகளைச் செய்வீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். வழக்கு களில் வெற்றி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் நீங்கும். எனினும், செவ்வாய் 12-ல் இருப்ப தால், சகோதரர்களுடன் மன வருத்தம் ஏற்படலாம்.வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் செலவுகள் அதிகரிக்கும். ஆவணி முதல் மகிழ்ச்சி உண்டாகும்.

1.9.17 வரை குரு 4-ல் இருப்பதால், அலைச்சலும் ஏமாற்றங்களும் உண்டு. தாயாரின் உடல்நலன் பாதிக்கும். 2.9.17 முதல் குரு 5-ல் அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். ஆனால், 14.2.18 முதல் 13.4.18 வரை குரு வக்கிரகதியிலும் அதிசாரத்திலும் 6-ல் சென்று மறைவதால், பணத் தட்டுப்பாடும் சிறுசிறு கடன் பிரச்னைகளும் வந்து நீங்கும்.

18.12.17 வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

ஆனால், 19.12.17 முதல் சனிபகவான் 7-ல்அமர்வதால், கணவன் – மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். வாழ்க்கைத் துணைவருக்கு சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம்.

26.7.17 வரை ராகு 3-ல் தொடர்வதால், தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிநாடு, வெளி மாநிலங்களில் உள்ளவர்களால் ஆதாயம் உண்டாகும். ஆனால், கேது 9-ல் இருப்பதால், தந்தை வழி உறவினரோடு சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். 27.7.17 முதல் ராகு 2-லும் கேது 8-லும் தொடர்வதால், கணவன் – மனைவிக்குள் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால், உடனே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.மற்றவர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

15.10.17 முதல் 2.12.17 வரை செவ்வாய் 4-ல் அமர்வதால், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். 10.3.18 முதல் 13.4.18 வரை செவ்வாயும் சனியும் 7-ல் அமர்வதால், வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். சொத்து விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில் செப்டம்பர் முதல் பற்று, வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். ஆனால், 19.12.17 முதல் சனி பகவான் 7-ல் மறைவதால், பங்குதாரர்களுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழிலில் ஈடுபட வேண்டாம். பெரிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை வியாபாரம் நன்றாக நடக்கும். உணவு, துணி, ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். செப்டம்பர் முதல் குரு பகவான் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.

மாணவ-மாணவிகள் திறமை களை வளர்த்துக்கொள்வார்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த பாடப் பிரிவுகளில்- விரும்பும் பள்ளி, கல்லூரி களில் சேரும் வாய்ப்பு உண்டு. உங்களால் பெற்றோருக்கு புகழும் கௌரவமும் கூடும். 

கலைத் துறையினரே! உங்களுடைய யதார்த்தமான படைப்பு கள் அனைவராலும் பாராட்டப்படும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. சம்பள பாக்கி கைக்கு வரும். புகழ்பெற்ற கலைஞர் களின் ஆதரவு கிடைக்கும்.  
   
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் முற்பகுதி செலவுகளையும், ஆரோக் கியக் குறைவுகளையும் தருவதாக அமைந்தாலும், வருடத்தின் மையப் பகுதி முதல் குடும்பத்தில் மகிழ்ச்சியை யும் பணவரவையும் உண்டாக்கும்.

பரிகாரம்

கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பிகைக்கு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். வாழ்வில் பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-ரிஷபம்

ரிஷபம் (கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்)

வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்களே!

சந்திரன் 6-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், திடீர் பயணங்கள் உண்டு. ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். Continue reading →

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-மேஷம்

மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே!
சுக்கிரன் ராசிக்கு 12-ல் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் ஹேவிளம்பி புத்தாண்டு பிறப்பதால், வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தேவையான வங்கிக் கடனும் கிடைக்கும். குருபகவான் 1.9.17 வரை 6-வது வீட்டில் மறைந்திருப்பதால், செலவுகளும் கடன் பிரச்னைகளும் இருந்தபடி இருக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், வெளிநாட்டுப் பயணம் போன்ற விஷயங்கள் சற்று தடைபட்டே முடியும்.

Continue reading →

கோபத்தை தண்ணீரில் கரைக்கலாம்… எப்படி?

ப்போதெல்லாம் உங்களுக்குக் கோபம் வரும்? காலை உணவை வாயில் வைக்க முடியாதபோது? கொடுமையான டிராஃபிக்கில் மாட்டிக்கொள்ளும்போது? அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி உங்களைத் திட்டும்போது? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதைக் கேட்காதபோது? இன்னும் பல காரணங்கள் இருக்கலாம். கோபப்படாத மனிதரென்று யாராவது உண்டா? நிச்சயம் இல்லை. ஆனால், அது நம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டால் அதன் விளைவுகள் ஆபத்தானவை. அப்படிப்பட்ட கோபத்தை எப்படி விரட்டுவது என்று பார்ப்போம்.

Continue reading →

எலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை!

சாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடுகிறீர்களா? அப்படியெனில், நீங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளையும் சேர்த்தே தூக்கி எறிகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  வைட்டமின் ஏ, பி1, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து உள்பட பல சத்துகள் கறிவேப்பிலையில் உள்ளன. அகத்திக்கீரைக்கு அடுத்தபடியாக கறிவேப்பிலையில்தான் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ளது.

Continue reading →

குழந்தைகளின் பருமனுக்கு ஸ்மார்ட்போன் காரணமா?!

ந்தக் குழந்தையைப் பார்த்தா 12 வயசுப் பொண்ணு மாதிரி தெரியும். ஆனா, அதோட வயசு ஆறுதான்…’ – இப்படி வயதுக்கு மீறிய இரட்டிப்பு வளர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்துக் கொண்டிருப்பதைக் கவனிக்கிறீர்களா?

கொழுகொழு குழந்தைகள்தான் மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் என்று

Continue reading →

மணவாழ்க்கை அருளும் மாவடி தரிசனம்!

கோயில்களின் நகரமாம் காஞ்சியில், சிவனார் ஏகன் அநேகனாக அருளும் திருக்கோயில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இறைவன் பிருத்வி லிங்கமாக அருளும் கோயில், அம்பிகைக்கு அருள்பாலித்த ஆலயம், சகஸ்ரலிங்க தரிசனம் கிடைக்கும் சந்நிதி… இப்படியான இந்தத் திருக்கோயிலின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது மாவடி தரிசனம்!

ம்பிகை மணலால் லிங்கம் அமைத்து, காஞ்சியில் தவமியற்றினாள். அப்போது, கதிரவனின் வெங்கதிர்கள் அம்பிகையைத் தகிக்கக்கூடாதே என்று எண்ணியதுபோல், நான்கு வேதங்களே நான்கு கிளைகளாகப் படர்ந்து விரிந்த மாமரமாகத் தோன்றி, அன்னைக்குக் குளிர்நிழல் தந்தன.

ந்த மாமரத்தின் அடியில்தான் சிவபெருமான் அம்பிகைக்குக் காட்சி தந்து அருளினார்.  ஆகவே, அவருக்கு ஏகாம்பரம் என்ற திருநாமமும் ஏற்பட்டதாம்.

ந்த அருளாடலின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும்விதமாகத் திகழ்கிறது மாவடி சந்நிதி.
வழிபடுவது எப்படி?
இறைவன் மாமரத்தின் அடியில் அம்பிகைக்குத் தரிசனம் தந்து அருளியதை நினைவுகூர்வதுபோல், ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்ஸவத்தின் 9-வது நாள், `மாவடி சேவை’ என்ற வைபவம் நடைபெற்று வருகிறது. அதேபோல், ஆலயப் பிராகாரத்தில் அமைந்துள்ள `மாவடி’ சந்நிதி தரிசிக்க வேண்டிய ஒன்று. சற்று உயரமான இடத்தில், மாமரத்தின் அடியில் அமைந்துள்ளது இந்தச் சந்நிதி. இந்த மரத்தைப் பிரதட்சணம் செய்து, அம்மையப்பரை வழிபட்டால், கன்னிப் பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தின் பழைமையான மாமரம் பட்டுப்போய்விட, வேளாண் விஞ்ஞானிகளின் உதவியுடன் பழைய மரத்தின் மரபணுக்களைக் கொண்டு ஒரு புதிய மரத்தை உருவாக்கினார்களாம்.
பழைய மரத்தின் ஒரு பகுதியைக் கண்ணாடிப் பேழையில் வைத்துள்ளார்கள்.
எப்படிச் செல்வது?
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில், `பெரிய காஞ்சி’ பகுதியில் அமைந்திருக்கிறது ஸ்ரீஏகாம்பரநாதர் ஆலயம்.