Advertisements

கையெழுத்திடும் கைகள் கவனம்!

முன்பெல்லாம் பென்சிலையும் பேனாவையும் பயன்படுத்திக் கைகளால் எழுதி வந்தோம். அப்போதெல்லாம் கையெழுத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. ‘கையெழுத்து சரியில்லை என்றால் தலையெழுத்து சரியில்லை’ என்றுகூடச் சொல்வார்கள். பிறகு பென்சில், பேனாவால் கைகளால் எழுதுவது மாறி, தட்டச்சு செய்வது

வழக்கமாகிவிட்டது. கையெழுத்தின் வேலையைத் தட்டச்சின் அசுர வளர்ச்சி ஆட்கொண்டுவிட்டது. ஆனால், இப்போதும் கைகளால் எழுதியும், தட்டச்சு செய்தும் வருபவர்களுக்குச் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய பிரச்னை ரைட்டர்ஸ் க்ராம்ப் (Writer’s cramp). இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது, இதற்கான தீர்வுகள் என்னென்ன என்பன பற்றிப் பார்க்கலாம்.

தசைநார் பிரச்னை
கை, விரல், கை மூட்டு, தோள்பட்டை ஆகிய இடங்களில் பிடிப்பு, வலி ஏற்படுவதைத் தசைநார் பிரச்னை (Writer’s cramp) என்போம்.
தசைநார் பிரச்னை என எப்படிக் கண்டுபிடிப்பது?
பொதுவாகக் கைகளை மடக்கவும் நீட்டவும் முடியாமல் வலி ஏற்படும். இந்த மாதிரியான தசைநார் பிரச்னை ஏற்படும்போது, பெருவிரலில் அதிக அளவில் வலி ஏற்படும். அதனை வைத்தே இது தசைநார் பிரச்னை என அறிந்துகொள்ள முடியும்.
தசைநார் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் களுக்குக்,  கையெழுத்தைக்கூடச் சரியாகப் போட வராது.
காரணங்கள்
கைகளுக்கு இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து வேலை கொடுத்துக்கொண்டே இருப்பதால்தான் இது போன்ற தசைநார் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எழுதுபவர்களுக்கு: பேனாவைப் பிடித்து எழுதும் முறைகளும் ஒரு காரணம்தான். ஏனெனில், சிலர் பேனாக்களை இறுக்கமாகப் பிடித்து எழுதுவார்கள். ஒரு சிலர் சாய்த்துப் பிடித்து எழுதுவார்கள். தொடர்ச்சியாக இடைவெளியே இல்லாமல் எழுதிக்கொண்டே இருந்தாலும், தசை நார் பிரச்னைகள் ஏற்படும். பெரும்பாலும் எழுத்துத் துறைகளில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக 30-50 வயதுள்ளவர் களுக்கு வரும். சில மாணவர்களுக்கு அதிகளவில் எழுதுவதால்கூட வரலாம்.
தட்டச்சு இயந்திரம் அல்லது கணினியில் தட்டச்சு செய்பவர்களுக்கு: இடைவெளியே இல்லாமல் தட்டச்சில் தொடர்ந்து ஈடுபட்டு, விரல்களுக்கு அதிக அளவில் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பதும் இதற்கான காரணம். சில தட்டச்சுகள் கடினமானவையாக இருக்கும். அப்போது விரல்களுக்கு அதிக அளவு பளு கொடுப்பதால், விரல்கள் வலுவிழந்து வலியை ஏற்படுத்தும். டைப்ரைட்டிங், டேட்டா என்ட்ரி போன்ற தட்டச்சு தொடர்பான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம்.
இசைக்கருவி வாசிப்பவர்களுக்கு: வீணை, கிடார், கீ போர்டு போன்ற இசைக்கருவிகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் கை விரல்களில் வலி, பிடிப்பு ஆகியவை ஏற்படும்.

தீர்வுகள்
எழுத்து, இசை மற்றும் கணினி பயன்படுத்தும் துறைகளில் வேலை பார்ப்போர் கைகள், விரல்கள் மற்றும் மூட்டுகள் ஆகியவற்றுக்கான அவசியப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எழுதுபவர்கள், சரியான முறையில் பேனாவைப் பிடித்து எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். படுத்துக்கொண்டே எழுதுவது, சரியான நிலையில் இல்லாமல் எழுதுவது போன்ற செயல்களைத் தவிர்ப்பது நல்லது.
எந்த வேலையாக இருந்தாலும், தொடர்ந்து செய்யாமல் சற்று இடைவெளிவிட்டுச் செய்வது நல்லது.
கைகளில், விரல்களில் அடிக்கடி நெட்டி முறிப்பதைத் தவிர்க்கலாம். நெட்டி முறிப்பதால், இரண்டு மூட்டுகளின் இடையில் உள்ள வழவழப்புத்தன்மை (Lubrication) பாதிக்கும்.
கடினமான தட்டச்சுகளைப் பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும். நிமிர்ந்த நிலையில், சௌகரியமான நாற்காலியில் உட்கார்ந்து வேலை பார்க்கவும்.
கைகளிலும், விரல்களிலும் தேங்காய் எண்ணெயைத் தடவி, மென்மையாக  மசாஜ் கொடுக்கலாம்.
தொடர்ந்து வலி, வேலை செய்ய முடியாத நிலை இருந்தால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
வலி, பிடிப்புகளைத் தடுக்கும் பயிற்சிகள்…
விரல்களுக்கு எனச் சில பயிற்சிகளைச் செய்யலாம். ஸ்ட்ரெஸ் பால் (Stress Ball), குழந்தைகள் விளையாடும் களிமண் (Clay) ஆகியவற்றைக் கைகளில் வைத்துப் பிசையலாம். இவையும் விரல்களுக்கான சிறந்த பயிற்சிகள்தான்.
வளைந்து கொடுக்கக்கூடிய கயிறுகளை, விரல்களுக்கு இடையே வைத்தும் விரல்களுக்கான பயிற்சிகளைச் செய்யலாம். இதற்கு ரப்பர்பேண்ட் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஏனெனில், பயிற்சி செய்யும்போது ரப்பர்பேண்ட் அறுந்து, கண்ணிலோ கைகளிலோ வேகமாகப்பட்டுக் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
கை விரல்களை 5-10 நிமிடங்கள் வரை மடக்கி, நீட்டி வருவதும் நல்ல தீர்வாகும்.
வெந்தயம், மிளகு ஆகியவற்றைத் தட்டில் கொட்டி அதை ஒவ்வொன்றாக விரல்களால் எடுப்பதும் சிறந்த பயிற்சி.
கட்டைவிரல் நுனியோடு மோதிர விரலின் நுனி தொடுவது, அதுபோல, மற்ற அனைத்து விரல்களும் கட்டை விரல் நுனியைத் தொடுவது என்பதுபோல, இந்தப் பயிற்சியை ஒவ்வொரு விரலுக்கும் இரண்டு நிமிடங்கள் என நேரம் ஒதுக்கிச் செய்வது நல்லது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: