Advertisements

வருகிறது வாட்ஸ்அப் மூலம் பணம் அணுப்பும் வசதி!

பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் அறிவித்து, ஐந்து மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த ஐந்து மாதங்களில் ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

இணையதளங்கள் மூலமாக பணத்தை அனுப்புவது ஒரு பக்கமிருக்க, மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்திய ‘பீம்’ (Bharat Interface for Money) என்கிற ஆப்பின் மூலம் சாதாரண மக்களும் எளிதாகப் பணம் அனுப்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ‘யுனைடெட் இன்டர்ஃபேஸ் ஆஃப் இந்தியா’ என்கிற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இந்தத் தொழில்நுட்பத்தின் மறுஜென்மம்தான் யுபிஐ (Unified Payments Interface) தொழில்நுட்பம். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், இந்த யுபிஐ தொழில்நுட்பம் மூலமாக மட்டுமே சுமார் 5,530 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 80,000 பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. ஒரு பரிவர்த்தனை மூலம் சராசரியாக ரூ.4,000 பணப் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது. 

யுபிஐ மூலம் இத்தனை மாற்றங்கள் நடந்திருந்தாலும், அந்தத் தொழில்நுட்ப வசதியானது இன்னும் பெருவாரியான மக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை. காரணம், இந்த யுபிஐ வசதியை 44 வங்கிகள் அளித்தாலும், அதைச் சாதாரண மக்களும் பயன்படுத்தும் அளவுக்கு  எளிதானதாக இல்லை.
இந்த நிலை மாறுவதற்கான விடிவு காலம் இப்போது வாட்ஸ்அப் மூலம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். சமீபத்தில் ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த வாட்ஸ்அப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன், மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்தியா மிக முக்கியமான நாடு. சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள், வாட்ஸ்அப் மூலமாகத் தங்கள் நண்பர்கள், குடும்பம் மற்றும் சமுதாயத்துடன் இணைந்திருப்பதைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக செயல்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் வாட்ஸ்அப் பங்களிக்கும்” என்று  தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, தனது அப்ளிகேஷன் மூலம் பணமில்லாப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நடவடிக்கையில் வாட்ஸ் அப்  நிறுவனம்  இறங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மத்திய அரசாங்கம் ஏற்கெனவே கொண்டு வந்திருக்கும் யுபிஐ பணப் பரிமாற்ற முறை பாதுகாப்பானது. இந்த அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி மொபைல் மூலமாகவே மற்றவர் களுக்குப் பணம் அனுப்ப முடியும். நெட்பேங்கிங் முறையில், பணம் அனுப்ப வேண்டியவரின் அக்கவுன்ட் நம்பர், வங்கிக் கிளையின் ஐ.எஃப்.எஸ்.சி விவரம் போன்றவை தேவை. ஆனால், யுபிஐ முறையில் பணம் அனுப்ப வேண்டியவரின் அக்கவுன்ட் நம்பர் மட்டும் தெரிந்தால்போதும். மேலும், 24 மணி நேரமும் உடனுக்குடன் பணம் செலுத்தவும், பெறவும் முடியும். வாட்ஸ்அப், தனது அப்ளிகேஷனை யுபிஐ வசதி கொண்டதாக அப்டேட் செய்ய இருக்கிறது. இதற்காக மொபைல் அப்ளிகேஷன் மூலமாகப் பணம் அனுப்பும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை அந்த நிறுவனம் பணியில் அமர்த்தி வருகிறது.
ஃப்ரீ சார்ஜ் நிறுவனமானது ‘Chat and Pay’ என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலமாக பணம் அனுப்பும் வசதியை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியிருந்தது. ஃப்ரீ சார்ஜ் அப்ளிகேஷனிலிருந்து பணம் அனுப்ப வேண்டியவரை வாட்ஸ்அப்பில் செலக்ட் செய்து, அதன்பின் தொகையை என்டர் செய்வதன் மூலமே பணம் அனுப்ப முடியும். இதன் மூலம் எளிதாகவும் விரைவாகவும் பணம் அனுப்ப முடிவதால் இது பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் நேரடியாகவே தனது அப்ளிகேஷனில் பணமில்லாப் பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இந்த வசதியை வாட்ஸ்அப் முதல் முறையாக இந்தியாவில் தான் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஆறு மாத காலத்துக்குள் இதை அந்த நிறுவனம் செயல்படுத்தும் எனத் தெரிகிறது. மொபைல் எண்ணை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால் வாட்ஸ்அப் மூலமாகப் பணம் அனுப்புவது எளிதானதும், பாதுகாப்பானதும்கூட. பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் எண் மூலம் பயனாளர்களைச் சரிபார்க்கவும் வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது.
வாட்ஸ்அப் பணமில்லாப் பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தும் பட்சத்தில், வங்கிக் கணக்கோடு இணைத்திருக்கும் மொபைல் எண்ணை வாட்ஸ்அப்பில் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இதன் மூலம் இனி தனிநபருக்கு நேரடியாகப் பணம் அனுப்புவது இன்னும் எளிதாகும். இனி வாட்ஸ்அப் மூலமாக செய்திகள் மட்டுமின்றி, பணத்தையும் அனுப்பலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: