அறிமுகம் : புதிய ஏர்டெல் ஹாலிடே சர்ப்ரைஸ் ஆபர்; ஜியோவிற்கு பதிலடி.!

ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராக அதுவும் பிரத்தியேகமாக அதன் பிரதம உறுப்பினர்களுக்கான ரிலையன்ஸ் ஜியோவின் ‘தண் தணா தண்’ ஆபர்களுக்கு எதிராக அதன் ரூ.399/- திட்டத்தை அறிவித்தது.

மேலும் இப்போது ஜியோவை எதிர்கொள்ளும் முனைப்போடு அதன் புதி திட்டங்களையும், செல்லுபடி காலம் நீடிப்புகளையும், பயனர்களுக்கான பல வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அப்படியாக ஜியோவிற்கு எதிராக ஏர்டெல் அறிவித்துள்ள அதிரடி தாக்குதல் திட்டங்கள் என்ன.?

ஏற்கனேவே ஏர்டெல் நிறுவனம் இந்தியாவினுள் அதன் ரோமிங்கட்டணத்தை கழித்து வருகிறது. உடன் நிறுவனம் அதே அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களையம் அறிவித்துள்ளது. உதாரணமாக, ரூ.399 பேக் பயனர்கள் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் உடன் ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்குகிறது மற்றும் இந்த திட்டம் 70 நாட்கள் செல்லுபடியாகும்.

ஏர்டெல் ‘சர்ப்ரைஸ்’ சலுகையை பெறாதவர்களுக்காக இந்த சலுகையானது ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்கள் (மாதத்திற்கு 10ஜிபி) இலவச தரவை அதாவது 30ஜிபி தரவை அணுக கொடுக்கிறது.

இந்த சலுகையை பயனர்கள் மைஏர்டெல் பயன்பாட்டின் மூலம் பெறலாம். இந்தச் சலுகையின் கீழ், பயனர்கள் 3 மாதங்களுக்கு மாதத்திற்கு 10ஜிபி தரவு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனம் அதன் ‘சர்ப்ரைஸ்’ வாய்ப்பை செல்லுபடியாதலுக்கான காலத்தை நீடித்துள்ளது, அதாவதுமேலும் 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. மற்றும் அதன் ‘டபுள் யூவர் ஹாலிடே சர்ப்ரைஸ்’ என்ற பெயரின் கீழ் புதிய வாய்ப்பையும் அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஏர்டெல் போஸ்ட்பெய்டு பயனர்கள் அவர்களின் ஒரு பில்லிங் சுழற்சிக்கு கூடுதல் தரவை பயன்படுத்த முடியும். மேலும், ஏர்டெல் அதன் பயனர்களுக்கு ‘சிறந்த சர்வதேச ரோமிங் விகிதங்கள்’ சலுகையையும் உறுதி செய்துள்ளது.

இப்போது, பயனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது எந்தவொரு ரோமிங் பேக்கையும் செயல்படுத்த மறந்து விட்டால், ஏர்டெல் தானாகவே பேக் திட்டத்தின் கீழ் நன்மைகளை செயல்படுத்தும்.

உதாரணமாக, சிங்கப்பூருக்கான ஏர்டெல் தினசரி பேக் வரம்பற்ற உள்வரும் அழைப்புகள், இலவச தரவு, எஸ்எம்எஸ் மற்றும் இந்தியா அழைப்புகள் பேக் ரூ.499/- ஆகும். இப்போது, நீங்கள் சிங்கப்பூர் புறப்படும் முன்னர் இந்த பேக்கை செயல்படுத்தவில்லை என்றால் ஏர்டெல் தானாக ரூ.499 பேக் தனை செயல்படுத்தி விடும். ஒருவேளை ரூ.499/- அளவிலான பயன்களை நீங்கள் பெறவில்லையே எனில் பிரயோகம் அடிப்படையில் விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.

%d bloggers like this: