தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி!’ – தினகரனை ஓரம்கட்டிய ‘கொங்கு லாபி’
அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தைக் காக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் ஒன்றிணைய முடிவெடுத்துள்ளனர். ‘சசிகலா குடும்பத்தைத் தவிர்த்த அ.தி.மு.கவைத்தான் தொண்டர்கள் விரும்புகின்றனர். நேற்று அமைச்சர்கள் நடத்திய கூட்டத்திலும், தினகரனை ஓரம்கட்டியே வைத்திருந்தனர். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கும் முடிவில் முதல்வர் இருக்கிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்குவோம் : சசிகலா அணியில் இருந்த அமைச்சர்கள் அதிரடி!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், நேற்று முதல் ஆலோசனையில் ஈடுபட்டுவந்தனர்.
குறிப்பாக, இன்றும் தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
கான்டாக்ட் லென்ஸ் சந்தேகங்கள்!
பார்வை தெளிவாக இருக்க வேண்டும்; ஆனால், மூக்கு கண்ணாடி வேண்டாம், லேஸர் சிகிச்சையும் வேண்டாம்’ என்று நினைப்பவர்களுக்கான சரியான தேர்வு கான்டாக்ட் லென்ஸ். கான்டாக்ட் லென்ஸ் யார் அணியலாம், எந்த நேரங்களில் அணியலாம் என்பது உள்பட எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கிறார் கண்சிகிச்சை மருத்துவர் அமர் அகர்வால்.
யார் அணியலாம்?