வேட்டையாடு விளையாடு… தங்கமணி, வேலுமணி
வெப்பக்காற்று அதிகரிக்கும், வெளியில் போக வேண்டாம்’ என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்த செவ்வாய்க்கிழமை. காலையிலேயே சூரியன் தகித்துக் கொண்டிருக்க, கழுகார் உள்ளே நுழைந்தார். ஜில்லென மோர் கொடுத்து உபசரித்தோம். ஒரே மூச்சில் உறிஞ்சிக் குடித்தவர், ‘‘இந்த வெப்பக் காற்றைவிட பயங்கரமான பாலைவனப்புயல் சசிகலா குடும்பத்தில் வீசிக்கொண்டிருக்கிறது. 1996-2001 காலகட்டத்தில் அனுபவித்ததைவிட பல மடங்கு சிக்கல்களை அந்தக் குடும்பம் இப்போது சந்திக்கிறது. திடீர் திருப்பங்கள் தினம்தோறும் அரங்கேற்றமாகின்றன. ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலை வைத்து, சசிகலா குடும்பத்துக்கு எதிராக சென்னையில் போர் வியூகம் வகுக்கப்படுகிறது’’ என்றார்.
பன்னீர்செல்வம் செய்த தப்பை, நான் செய்ய மாட்டேன்!’ – எடப்பாடி பழனிசாமியின் ‘முதல்வர்’ லாஜிக்
அ.தி.மு.கவின் அணிகள் இணைப்பில் நடக்கும் நிபந்தனைகளால் தினகரன் வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ‘மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார் பன்னீர்செல்வம். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்கவில்லை. தற்போதுள்ள அரசு தொடர்வதையே பா.ஜ.க தலைமையும் விரும்புகிறது’ என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழுமா? எம்எல்ஏ-க்களின் கூட்டல், கழித்தல் கணக்கு!
அ.தி.மு.க. அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க-விலிருந்து ஓரங்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்களது விசுவாசிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குக் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரண்டு துருவங்களாக இருந்து செயல்பட்டுவருகின்றனர். சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைக்குப் பிறகு, ஓரணியாக இணைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில், Continue reading →
இடது பக்கம் படுத்தால் உடலுக்கு நல்லதா?
நான் எப்போதும் வலது பக்கமாகத் திரும்பிப் படுப்பேன். இரவில் அடிக்கடி நெஞ்செரிச்சல் வந்து விழித்துக்கொள்கிறேன். இடது பக்கம் திரும்பிப் படுத்தால் இது ஏற்படாது என்கிறார் என் கணவர். இது உண்மையா? எப்படி?
இடது பக்கமாகப் படுத்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம் என்று சொல்வது உண்மைதான்.
சளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை
நமக்கு எளிதிலே, மிக அருகிலே, தெருவோர கடைகளிலே கிடைக்கும் மூலிகைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் வெற்றிலை, திரிகடுக சூரணத்தின் பயன்களையும், பித்த தலைச்சுற்றினை நீக்கும் இஞ்சியின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
வைட்டமின் டி குறைந்தால் ஆபத்து
வைட்டமின்கள் இரண்டு வகைப்படும். அவை கொழுப்பில் கரைபவை, தண்ணீரில் கரைபவை. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ,டி,ஈ,கே ஆகும். இதேபோல் வைட்டமின்கள் பி1,பி6,பி7,பி12 ஆகியவை தண்ணீரில் கரைபவை. எலும்புகள் மற்றும் தசைகள் வலுவாக இருக்க