Daily Archives: ஏப்ரல் 20th, 2017

இணைய வேண்டுமானால்..! பழனிசாமி அணியை அதிரவைக்கும் பன்னீர்செல்வம் அணியின் நிபந்தனைகள்!

தினகரனை வெளியேற்றி நாடகம் நடத்துகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ள பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா, தினகரன் ஆகியோரிடமிருந்து ராஜினாமா கடிதம் பெற வேண்டும் என்றும், கட்சியில் இருந்து இருவரையும் வெளியேற்றுவதை அறிக்கையாக தர வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்துள்ளனர்.

Continue reading →

வீட்டைக்காக்கும் டிஜிட்டல் வாட்ச் மேன்!

ஜாலியாக ஒரு வாரம் சுற்றுலா செல்லலாம் என்று கிளம்புகிறவர்களின் ஏழு நாள்களையும் நிம்மதியாக இருக்க விடாமல் செய்ய ஒரு சிறிய பூட்டால் முடியும். காரணம், ஒழுங்காக வீட்டைப் பூட்டினோமா? வீட்டில் நுழைந்து யாராவது திருடிவிட்டால் என்ன செய்வது?  இப்படிப் பல குழப்பங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். பக்கத்து வீட்டுக்காரருக்கு அடிக்கடி போன் செய்து, அவரையே `காவல்காரர்’ ஆக்குவோம். நிரந்தரமாக ஒரு வாட்ச் மேன் பணியில் இருந்தாலும்கூட, இந்தக் குழப்பம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும்.

Continue reading →

மன அழுத்தமா? துரத்துங்கள் இப்படி!

பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் சங்கீதா மது…

பாசிட்டிவ் எனர்ஜியை கடத்துங்கள்!
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சவால், பிரச்னை இருக்கும். நாம் ஒவ்வொரு செயலையும் எதிர்சிந்தனை இல்லாமல் அணுகும்போது, நம்முடைய பாசிட்டிவ் எனர்ஜி அனைவரையும் சென்றடையும்.
திட்டமிடுதல் முக்கியம்

Continue reading →

செரிமானத்தை தூண்டும் மாங்காய்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மாங்காய், மாவிலையின் நன்மைகள் குறித்து அறியலாம். மா பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மாங்காய், மாம்பழம், இலை, பட்டை, பூ என அனைத்தும் மருந்தாகிறது. மாவிலைகள் தொண்டைக்கட்டு, வலி, வீக்கத்தை சரிசெய்யும். மாவிலைகளை காயவைத்து தேனீராக்கி குடிப்பதால் உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி, வீக்கம் குணமாகும். மாவிலையை புகையாக்கும்போது கொசுக்கள் வராது.

Continue reading →