Advertisements

வீட்டைக்காக்கும் டிஜிட்டல் வாட்ச் மேன்!

ஜாலியாக ஒரு வாரம் சுற்றுலா செல்லலாம் என்று கிளம்புகிறவர்களின் ஏழு நாள்களையும் நிம்மதியாக இருக்க விடாமல் செய்ய ஒரு சிறிய பூட்டால் முடியும். காரணம், ஒழுங்காக வீட்டைப் பூட்டினோமா? வீட்டில் நுழைந்து யாராவது திருடிவிட்டால் என்ன செய்வது?  இப்படிப் பல குழப்பங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். பக்கத்து வீட்டுக்காரருக்கு அடிக்கடி போன் செய்து, அவரையே `காவல்காரர்’ ஆக்குவோம். நிரந்தரமாக ஒரு வாட்ச் மேன் பணியில் இருந்தாலும்கூட, இந்தக் குழப்பம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும்.

இவற்றுக்கெல்லாம் தீர்வு சொல்லும் வகையில் இன்றைய தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. ஒரு வீட்டை யார் உதவியுமின்றி ஒற்றைத் தொழில்நுட்பம் கொண்டே பாதுகாக்க முடியும் என்கிற சூழலை இன்றைய அறிவியல் வளர்ச்சி நமக்கு அளித்துள்ளது. டிஜிட்டலாக எப்படியெல்லாம் நம் வீட்டை பாதுகாத்துக்கொள்வது என்பது தொடங்கி, யார் நம் வீட்டை உடைத்துத் திருட முயன்றது என்பது வரை எல்லாவற்றையுமே அறிய முடியும்.

வீடுகளில் பொருத்தும் வகையில் பல்வேறு டிஜிட்டல் பாதுகாப்பு சாதனங்கள் விற்பனையில் உள்ளன. இவற்றை குறிப்பாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக… வீட்டில் உள்ள பீரோ, லாக்கர் போன்றவற்றைப் பாது காப்பது, இரண்டாவதாக… வீட்டில் உள்ள கதவுகள், லாக்கர் கதவுகள் போன்றவற்றைப் பாதுகாப்பது, மூன்றாவதாக வீடியோ பதிவு செய்து உள்ளே நுழைய முற்பட்ட நபர் யார் என்பதை தெரிந்து கொள்வது.
இந்தச் சாதனங்கள் குறித்து டெக் லின்க் ஆட்டோமேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த பால சந்தரிடம் கேட்டோம். ‘`மக்கள் இன்று பாதுகாப்பு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றாலும்கூட, எப்போதும் வீட்டோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்பதையே விரும்பு கிறார்கள். அதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் நிறைய வழிவகை செய்கிறது.

லாக்கர்களிலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். முக்கிய ஆவணம், நகைகள், பணம் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைக்க  லாக்கர்களைப் பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் இவை உறுதியாக இருக்கும் வகையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்போது சென்சார்கள் போன்ற அமைப்புகளின் உதவியோடு வடிவமைக்கப்பட்டுள்ளன.

லாக்கரை யாராவது திறந்தாலோ, உடைக்க முயற்சித்தாலோ, உடனே நமது மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்.
வரும்வகையில் இதில் அலெர்ட் சிஸ்டம் உள்ளது. மேலும், இந்த லாக்கர்கள் தீ விபத்திலும் இடிபாடுகளிலும் சேதமாகாத உறுதியுடன் வடிவமைக்கப்படுகின்றன. இதன் விலை, அளவைப் பொறுத்து மாறுபடும். சராசரியாக 15 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விலையில் லாக்கர்கள் கிடைக்கின்றன. `பின் நம்பர்’ உபயோகித்து திறப்பது, பயோமெட்ரிக் மூலம் கைரேகை வழியாக மட்டுமே திறப்பது என்று பல வசதிகளுடன் லாக்கர்கள் கிடைக்கின்றன.

அடுத்ததாக… கதவுகளுக்கான வீடியோ போன்கள், வீட்டில் இல்லாதபோது யார் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார்கள், வீட்டில் இருக்கும்போது யார் வந்திருக்கிறார்கள் என்பதை எளிதாகக் கண்காணிக்க முடியும். வயதானவர்கள் தனியாக இருக்கும் வீட்டில் யாராவது உள்ளே நுழைந்து தாக்காமல் இருக்க இதுபோன்ற வீடியோ போன்கள் உதவும். யார் வெளியே நிற்கிறார்கள் என்று உள்ளே உள்ள வீடியோ ஸ்க்ரீனில் தெரிந்துவிடும். பின்னர், கதவைத் திறக்கலாமா, வேண்டாமா என்கிற முடிவை எடுக்கலாம். அதுமட்டுமல்ல… வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற பிறகு, வீட்டுக் கதவு வரை யார் வந்து சென்றாரோ, அவரது புகைப்படத்தைச் சேமித்து வைக்கும் வசதியும் இதில் உண்டு. இதில் சென்சாரை இணைத்தால் போதும்…  வீட்டை யாராவது தாக்கி உடைக்க முற்பட்டால் அலாரம் மூலம் அருகில் இருப்பவர்களுக்கும், வீட்டு உரிமையாளருக்கும் எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தகவல் தெரிவித்துவிடும். இவை வழக்கமான சிசிடிவி கேமரா அமைப்பிலிருந்து வேறுபட்டவை. 8 ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.  வீடியோ திரையின் அளவை பொருத்து விலையில் மாற்றம் இருக்கும்.

மற்றொன்று… அலாரம் சிஸ்டம். வீட்டை பல விதங் களில் பாதுகாக்கும் இந்த அமைப்பு, 360 டிகிரிகளில் வீட்டின் அனைத்துப் பகுதி களையும் பாதுகாக்கும். இதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டாலோ, யாராவது கதவை உடைக்க முயன்றாலோ அலாரம் மூலம் எச்சரிக்கை செய்யும். இதனோடு அளிக்கப்படுகிற ரிமோட் கருவியை  வீட்டில் இருக்கும் முதியவர்கள், பெண்களிடம் கொடுத்துவிடலாம். தவறான நபர்கள் உள்ளே நுழைய முயற்சிக்கும்போது ஒரு பட்டனை அழுத்தினால் அலாரம் `ஆன்’ ஆகிவிடும். வீட்டுக்கு வெளியே இருக்கும் நபருக்கும் தகவல் சென்று விடும். இதன் விலை ரூ. 20 ஆயிரத்திலிருந்து…” பொருள்களைக் காட்டி விளக்கினார் பாலசந்தர்.
இவை தவிர, வழக்கமான சிசிடிவி கேமராக்கள், செல் போனுடன் இணைக்கப் பட்ட `கேமரா ஆப்’கள் என மார்டன் கருவிகள் ஏராளம் உள்ளன. வீட்டுக்கு வெளியே இருந்தாலும் `ஒற்றை ஆப்’ வாயிலாகவே சகலத்தையும் கண்காணிக்கும் வசதி இன்று நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. இனி சுற்றுலா வுக்கோ, பணி நிமித்தமாக வெளியூருக்கோ சென்றால் கவலைப்பட வேண்டாம்… இந்த டிஜிட்டல் வாட்ச்மேன் இனி உங்கள் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: