மும்மூர்த்திகளின் ‘க்ளீன் தமிழ்நாடு’ ஆபரேஷன்! சிக்கலில் அமைச்சர்கள்
குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்கமுடியும் என்பது மற்றவிஷயங்களுக்கு எப்படியோ இன்றைய தமிழக அரசியல் நிலவரத்துக்கு கனக் கச்சிதமாக பொருந்துகிறது.
முடக்கப்பட்ட கட்சிச் சின்னத்தை மீட்க தேர்தல் கமிஷனிடம் ஐம்பதுகோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் 3 நாள் விசாரணைக்குப்பின் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் தினகரன் கைது செய்யப்பட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.