Monthly Archives: ஏப்ரல், 2017

மும்மூர்த்திகளின் ‘க்ளீன் தமிழ்நாடு’ ஆபரேஷன்! சிக்கலில் அமைச்சர்கள்

குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்கமுடியும் என்பது மற்றவிஷயங்களுக்கு எப்படியோ இன்றைய தமிழக அரசியல் நிலவரத்துக்கு கனக் கச்சிதமாக பொருந்துகிறது.

முடக்கப்பட்ட கட்சிச் சின்னத்தை மீட்க தேர்தல் கமிஷனிடம் ஐம்பதுகோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் 3 நாள் விசாரணைக்குப்பின் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் தினகரன் கைது செய்யப்பட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue reading →

தினகரன் கதை! போயஸ் கார்டன் என்ட்ரி முதல் டெல்லி கைது வரை…

மாதிகளின் பூமி’ என்றழைக்கப்படும் டெல்லியில் டி.டி.வி.தினகரனின் அரசியல் வாழ்க்கை அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இரட்டை இலையை மீட்கத் துடித்த தினகரன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், அ.தி.மு.க-வில் அவருக்கிருந்த கொஞ்சநஞ்ச ஆதிக்க சக்தி, ஆட்சியில் அவருக்கு இருந்த எச்சசொச்ச செல்வாக்கு, சமீபமாக அவருக்குள் வளர்ந்திருந்த அரசியல் கனவுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் கார்டனுக்குள் நுழைந்தபோது தொடங்கிய தினகரனின் அரசியல்… டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டதில் ‘அஸ்தமனம்’ ஆனது வரையிலான கதை… 

தினகரனின் போயஸ் கார்டன் ‘என்ட்ரி’!

Continue reading →

எடப்பாடி பழனிசாமியிடம் ஏன் பேசினார் தினகரன்?’ – டெல்லி கொதிப்பின் பின்னணி

இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன், ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். ‘சசிகலா குடும்பத்தை முழுமையாக அப்புறப்படுத்திய தகவல் வந்தால்தான், டெல்லியின் இறுக்கம் குறையும். இணைப்பு முயற்சிக்கு அவர் தடையாக இருக்கிறார் என்ற சந்தேகம் வந்ததால்தான், கைது நடவடிக்கைக்கு ஆளானார்’ என்கின்றனர் பன்னீர்செல்வம் தரப்பினர்.

Continue reading →

ஓடியது டேப்… ஒப்புக்கொண்டார்… கைதாகிறார்?

பேச்சுவார்த்தைக்குத் தயார். அலுவலகத்தில் இருக்கிறீர்களா?’ என கழுகாரிடமிருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. கொஞ்ச நேரத்திலேயே, கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘என்ன இது புதுப்பழக்கம்?” என்றோம்.
‘‘அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பித்தானே பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். அம்மா அணியின் குழுத் தலைவர் வைத்திலிங்கம், புரட்சித்தலைவி அம்மா அணியின் குழுத் தலைவர் கே.பி.முனுசாமிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக சொல்லி இருந்தாரே!”

Continue reading →

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆரோக்கியம் காக்குமா?

செக்கில் ஆட்டப்பட்டுத் தயாரிக்கப்பட்ட எண்ணெய் தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. சுத்திகரிக்கப்பட்ட எந்த எண்ணெயும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.

எண்ணெய் சுத்திகரிப்பு எப்படி நடைபெறுகிறது?

Continue reading →

எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்!’ பெற்றோரைத் தாக்கும் புதிய பிரச்னை

ம்மாவின் முந்தானையைப் பிடித்து வளர்ந்த மகனாக இருந்தாலும் அவன் மேல்படிப்புக்காக வெளிநாடு போக வேண்டிய சூழல் ஏற்படும்போது ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்? தந்தையின் மடியில் படுத்து… செல்லமாய் சிணுங்கி… அடம் பிடித்து அழுது ஐபோன் வாங்கிய மகளுக்குத் திருமணமானதும் அவள் கணவன் வீடு

Continue reading →

டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்! – தவிர்ப்பது எப்படி?

‘நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை’ எனப் பாரதி பாடியிருப்பார். ஆனால், இன்று பெரும்பாலானோருக்கு நிமிர்ந்த நடையும் இல்லை; நேர்கொண்ட பார்வையும் இல்லை. அனைத்தும் செல்போனை நோக்கியே இருக்கிறது. பெரும் பாலானோருக்கு இருந்த நிமிர்ந்த நெஞ்சம், இன்றளவில் கூன் விழுந்துவிட்டது. காரணம் செல்போன்கள். மெசேஜ் செய்துகொண்டும், பேஸ்புக் பார்த்தபடியும், பாட்டு கேட்டபடியும் மக்கள் நடமாடத் தொடங்கிவிட்டனர். கழுத்து வளைந்து, செல்போனை நோக்கியபடி மாறியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்குப் பெயர் ‘டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்’. இதைத் தவிர்க்கும் வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.

யாரை அதிகம் பாதிக்கிறது? காரணங்கள் என்னென்ன?

Continue reading →

157 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை வளாகம் சுற்றுலா தலமாகிறது: பொதுமக்கள் பார்வையிட அனுமதி

அடர்ந்த வனப்பகுதி, அரிய வகை மரங்கள், தாவரங்கள், மான்கள், நட்சத்திர ஆமைகள் என இயற்கையின் கொடையாக அமைந் திருக்கும் தமிழக ஆளுநர் மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களின் அழகை இனி பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம்.

Continue reading →

உஷ்ணத்தை தணிக்கும் தர்பூசணி

பல்வேறு நன்மைகளை கொண்ட தர்பூசணி நீர்ச்சத்தை அதிகம் உள்ளடக்கியது. நாவறட்சி, தாகம், உடல் உஷ்ணத்தை போக்ககூடியது. நோய் நீக்கியாக விளங்கும் தர்பூசணி, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. இதில், வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண்பார்வை குறைபாடுகளை களைகிறது. பார்வையை பலப்படுத்துகிறது. சிறுநீரகத்தை சீர் செய்கிறது. சிறுநீரை பெருக்கி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. எலும்புகளுக்கு பலம் தருகிறது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. தர்பூசணியை பயன்படுத்தி ரத்த அழுத்த குறைபாடினால் உண்டாகும்

Continue reading →

டெல்லியில் தினகரனை முடக்க திட்டம்- பின்னணி இதுதான்!

டெல்லி காவல்துறையின் விசாரணையில் இருக்கும் தினகரன் விசாரணை முடிந்து சென்னை திரும்புவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. தினகரனுக்கு இடைத்தரகராக இருந்ததாக சுகேஷ் சந்திரசேகரையும் கைது செய்துள்ளது டெல்லி போலீஸ். அவரிடம் விசாரணை செய்தபோது தினகரன் லஞ்சம் தர முயன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, டெல்லி போலீஸார் சென்னைக்கே வந்து தினகரனுக்கு சம்மன் கொடுத்து சென்றனர்.

Continue reading →