Monthly Archives: மே, 2017

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்

உயிர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் மாம்பழம் முக்கியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். “உடல் சூடு அதிகரிக்கும்’ என்று பலரும் மாம்பழம் சாப்பிட தயங்குகின்றனர். ஆனால், இதற்கு மருத்துவ அடிப்படையில் எந்த சான்றும் இல்லை என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Continue reading →

என்பிஎஸ்… கைநிறையக் கிடைத்த லாபம்!

ன்பிஎஸ் (நேஷனல் பென்ஷன் சிஸ்டம்) திட்டத்தில் முதலீடு செய்வது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம்  அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். என்பிஎஸ் முதலீட்டின் மூலம் கிடைத்த லாபம், நிஃப்டி இண்டெக்ஸ் தந்த லாபத்தைவிட அதிகமாக இருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

Continue reading →

வினோத ஆற்றல் கொண்ட வேம்பு எண்ணெய்

நம் முன்னோர்களின் அரிய இயற்கை மருந்தாக வேப்ப எண்ணெய் இருந்துள்ளது. கிராம மருந்தகம் என்று போற்றப்படும் வேம்பின் ஒவ்வொரு பாகமும் சிறந்த மருத்துவ குணமுடையதாகும்.
தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறந்த கிருமி நாசினியாக வேப்ப எண்ணெய் பயன்படுகிறது. வேப்ப இலை, காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. வேப்பம்பழ விதைகளில் இருந்து வேப்ப எண்ணெய், தயாரிக்கப்படுகிறது. கசப்புத்தன்மையுள்ள இந்த எண்ணெய், மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுகிறது.

Continue reading →

விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!

நமது பிரபஞ்சம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

Continue reading →

ராங் கால் -நக்கீரன் 29.05.2017

ராங் கால்  -நக்கீரன் 29.05.2017

Continue reading →

எடபாடியிடம் எகிறிய மோடி -நக்கீரன் 29.05.2017

எடபாடியிடம் எகிறிய மோடி -நக்கீரன் 29.05.2017

Continue reading →

சரியும் எஃப்.டி வட்டி… அதிக வருமானத்துக்கு என்ன வழி?

டந்த சில ஆண்டுகளாக, வங்கி வட்டி விகிதம் குறைந்துகொண்டே வருவதைக் காண்கிறோம். இது வங்கிகளில் கடன் பெற்றுத் திரும்பச் செலுத்துபவர்களுக்கு நல்ல விஷயம்தான். இதன்மூலம் அவர்கள் வாங்கிய கடனுக்கான வட்டி குறைகிறது. ஆனால், வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர் களுக்கு வட்டி விகிதம் குறைப்பு என்பது நல்ல விஷயமல்ல.

Continue reading →

வேம்பு எனும் அருமருந்து!

துளசி, வில்வம், அறுகு, வன்னி வரிசையில் வேம்பும்  ஓர் அற்புத மூலிகையே. இவை அனைத்துமே நோய் தீர்க்கும் நல்மருந்துகள். வேப்ப மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியவை.     

வேப்பிலையை நீர்விட்டுக் கொதிக்க வைத்து, சூடு ஆறியதும் அதில் முகம் கழுவிவந்தால், சருமம் பளபளக்கும். தினமும் வேப்ப இலைகளைக் குளிக்கும் நீரில் போட்டு, சுமார் ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால் சரும நோய்கள் எதுவும் நெருங்காது.

Continue reading →

முற்றும் நெருக்கடி… எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா பொதுச்செயலாளர் ஆனார். பிறகு, முதல்வர் பதவியிலிருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் மோதல் வெடித்தது. தொடர்ந்து, இரண்டு அணிகளாக உடைந்தது அ.தி.மு.க. சில எம்.எல்.ஏ-க்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஓ.பி.எஸ் பக்கம் தாவ, எம்.எல்.ஏ தரப்பில் பலர் சசிகலா பக்கம் சென்றனர். இந்த நிலையில், சசிகலா சிறை, தினகரனுக்குப் பதவி எனக் காட்சிகள் மாறின. தேர்தல் ஆணையத்தால் ‘இரட்டை இலை’ சின்னமும் முடக்கப்பட்டது.

Continue reading →

ஆன்லைன் கட்டணங்கள் லாபம்..! எப்படி?

நாம் வாழும் ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியமானவை. இருபது, முப்பது வருடங்களுக்கு முன் எப்படியோ தெரியவில்லை. ஆனால் இன்று நாம் தவறவிடும் நிமிடங்கள் நமக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும் என்பதுதான் உண்மை. பொன் போன்ற நேரத்தை நமக்கு மிச்சப்படுத்திக்கொடுக்கும் பணியில் ஏராளமான தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது என்று சொன்னால் டிஜிட்டல் பேமென்ட்டை (ஆன்லைன் கட்டணங்கள்) சொல்லலாம்.

Continue reading →