தமிழகத்தில் அடுத்த இலக்கு தி.மு.க., ‘2 ஜி’ தீர்ப்புக்காக காத்திருக்கும் பா.ஜ.,

அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிக்கும் நிலையில், அதற்கடுத்த முக்கிய கட்சியான, தி.மு.க.,வின் வீழ்ச்சியை எதிர்பார்த்து, பா.ஜ., காத்துஇருக்கிறது.

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது, கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலை யிட்டார். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோரை அழைத்து, அரசியல் நிலவரம் பற்றியும் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில், மத்திய அரசுக்கு, ஜெயலலிதா நீண்ட நாட்களாக முட்டுக்கட்டை போட்டு வந்த, உணவு பாதுகாப்பு சட்ட மசோதா போன்ற சில திட்டங்களுக்கு, தமிழக அரசு தலையாட்டி யது. அப்போதே, தமிழக அரசை, மத்திய அரசு மறைமுகமாக இயக்குவதாக, எதிர்கட்சிகள் கூறின.

பிரச்னை:
முதல்வராக பன்னீர்செல்வம்

இருந்தபோது, ஜெயலலிதாவால் பெற முடியாத, ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதி கிடைத்தது. அதையடுத்து, அ.தி.மு.க.,வில் காட்சிகள் மாறின. பொதுச்செயல ராக சசிகலா முடிசூட்டி கொண்ட தும், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே பிரச்னை வெடித்தது.
அவர் சிறையில் தள்ளப்பட்டதன் பின்னணியிலும், பா.ஜ., இருப்பதாக, சசிகலா தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டது. பின், அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனையில் துவங்கி, தினகரன் கைது என, அ.தி.மு.க.,வுக்கு பாதகமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இரண்டாவது பெரிய கட்சியான, தி.மு.க.,வும், விரைவில் விழும் என, பா.ஜ., கணக்குப் போடுவதாக, அரசியல் வட்டாரங் களில் பேசப்படுகிறது.

இறுதிகட்ட விசாரணை

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரம் கூறியதாவது: ‘2 ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறை கேடு தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி எம்.பி., ஆகியோர் மீது, டில்லி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை நடந்து வருகிறது. ஜூலை மாதத்தில் தீர்ப்பு வரும் என, தெரிகிறது. ஜெ., மீதான சொத்துக் குவிப்பு வழக்கு போல, தி.மு.க.,வுக்கு பாதகமான தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இவ்வழக்கில், தி.மு.க., செயல் தலைவர்,

ஸ்டாலின் பெயரும், அமலாக்கத் குற்றப் பத்திரிகையில், இடம் பெற்றுள்ளது. அவர், ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா மற்றும் கோடீஸ்வரர் சாஹித் பல்வா ஆகியோரை, தன் வீட்டில் சந்தித்ததாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதனால், இவ்வழக்கின் தீர்ப்பில், ஸ்டாலின் பெயர் இடம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. அது நிகழ்ந்தால், தி.மு.க.,விலும் குழப்பமான சூழல் உருவாகும். அது நடந்தால், தமிழகத்தில், பா.ஜ., எதிர்பார்க்கும், தடையற்ற சூழல் ஏற்படும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

ஒரு மறுமொழி

  1. Very nice news and updates on this site has been a tamilnadu people who are interested please send us your feedback

%d bloggers like this: