மஞ்சளின் மகிமை கொஞ்சமா…

மஞ்சளில் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கக்கூடிய சத்து உண்டு. இதனால் உடல் சளி, இருமல், மாரடைப்பு போன்ற நோய்களைத் தடுக்கலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், உணவில் மஞ்சளை சேர்த்து கொள்வது நல்லது. இது ரத்தத்தின் குளுகோஸ் அளவை, கணைய சுரப்பு நீர் அளவைச் சரி செய்து, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. ஆனால், இதைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
உணவில் மஞ்சள் பயன்படுத்துவதால் காலில் ஏற்படும் எலும்பு மூட்டு வலியை குறைக்கும். அதோடு, உடல் அணுக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் சக்திகளை, மஞ்சள் அழிக்கும் சக்தி கொண்டது.

மஞ்சளில் இருதய நோய்களுக்கு காரணமான கொழுப்பினைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என, மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்ட்ரோக் நோயாளிகளுக்கு சிறந்த நிவாரணி இந்த மஞ்சள் ஆகும்.
பச்சை மஞ்சளின் தோல் நோக்கி, ஜூஸ் ஆக பிழிந்து குடித்தால் உடல் சூடு குறையும். அல்சரால் பாதிக்கப்பட்டிருந்தால், இரண்டு மேஜைக்கரண்டி மஞ்சள் ஜூஸ், நான்கு நாட்களுக்கு தொடர்ந்து அருந்தினால் அந்நோய் குணமாகும். கறி மஞ்சள் சமையலுக்குப் பயன்படுத்தப்படும்.
அதோடு சளி, மற்றும் தலைவலியைப் போக்கும்.
மஞ்சளைத் தூளாக்கி நீர் கலந்து கொதிக்க வைக்கவும். ஓரத்தில் வைத்துவிடவும். எண்ணெயைச் சூடாக்கி, சில நிமிடங்களுக்கு தலைமுடியில் தேய்த்து கொள்ளவும்.
முடியைக் கழுவும் போது கொதிக்க வைக்கப்பட்ட மஞ்சள் நீரைப் பயன்படுத்தவும். இவ்வாறு செய்யும்போது உடலில் தங்கியுள்ள சளிகள் வெளியேறும். கறி மஞ்சளைப் பயன்படுத்தி, குழந்தைகளைக் குளிப்பாட்டலாம். இந்த எண்ணெய் குழந்தைகளின் காய்ச்சலுக்கும் சளிக்கும் சிறந்த மருந்தாகும்.

%d bloggers like this: