புத்தக அலமாரி

புத்தகத்தை மேலிருந்து கீழ் நோக்கி படித்தால், கீழிருக்கும் உங்கள் வாழ்க்கை மேல் நோக்கி நகரும்’ என்று, புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகளை சொல்லும் வழக்கு. வெறும் புத்தக படிப்புகளில் மட்டும் உலக அறிவு கிடைத்து விடாது.

வரலாற்று நிகழ்வுகளை படிக்க விரும்பினால், பல்வேறு புத்தகங்களை படிக்க வேண்டும். இதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன நூலகங்கள். பள்ளி அளவில், நூலகங்கள் இருந்தும், பெரும்பாலான மாணவர்கள் பயன்படுத்துவதில்லை என்பது தான் நிதர்சனம்.
இதை விடுத்து, நூலகத்தை பயன்படுத்தும் பழக்கத்தை, மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இதற்காக, வீட்டில் சிறியளவிலான நூலகம் அமைக்கலாம். அதில், குழந்தைகளுக்கு தேவையான, அவர்களுக்கு புரியும் மொழியில் புத்தகங்களை வாங்கி வைக்கலாம்.
குழந்தைகளிடம் படிக்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்றால், நாம் முதலில், படிக்கப் பழக வேண்டும். நேரம் கிடைக்கும் போது, புத்தகங்களை எடுத்து படிக்க துவங்கினால், குழந்தைகளுக்கும் ஆர்வம் வரும். இந்த புத்தகங்களை படி என்று, கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ, அதை படிக்க வைக்க வேண்டும்.
என்னென்ன மாதிரியான புத்தகங்கள் பிடிக்கும் என, குழந்தைகளிடம் கேட்டு, அதை வாங்கிக் கொடுத்தால், தானாகவே படிக்கும் ஆர்வம் உண்டாகும். விடுமுறை நாட்களில், படிக்கும் நேரத்தை அதிகரிக்க முயற்சி எடுக்க வேண்டும். இதன் மூலம், பாடத்திலும் கவனம் செலுத்த வாய்ப்புண்டு. பாட சம்பந்தமான கருத்துகளும், இதுபோன்ற புத்தகங்களில் இடம் பெற்றிருக்கலாம்.
தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்களை அதிகளவில் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய காலத்தில், குழந்தைகளிடையே தன்னம்பிக்கை குறைபாடு அதிகம் இருக்கிறது.
இதை படிக்கத் துவங்கினால், எத்துறையிலும் சாதிக்க முடியும் என்ற உணர்வு, குழந்தைகளுக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

%d bloggers like this: