பரங்கிக்காய் சாறு மகத்துவம்

வெள்ளைப் பூசணி என அழைக்கப்படும் பரங்கிக்காய் சாறு ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பைப் போக்கக்கூடியது.
இதனால், மாரடைப்பு உட்பட பல இருதய நோய்கள் தடுக்கப்படுகின்றன. பரங்கிச்சாறு ஜீரணத்தைத் தூண்டி, மலச்சிக்கலையும் போக்க கூடியது.
சிறுநீரகத்தையும் சிறுநீர்ப்பாதையையும் சீர் செய்யக்கூடியது.

பரங்கிச்சாறு லேசான மயக்கமூட்டும் தன்மையை பெற்றுள்ளது. இதனால் தூக்கமின்மையை போக்கவல்லது. ஒரு டம்ளர் பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால், தூக்கம் தூண்டப்படுகிறது. இதைக் குடிப்பதால் கொழுப்புச் சத்து குறைக்க உதவுகிறது.
பரங்கிக்காய் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சி தரும் சிறந்த பானமாக அமைகிறது. இதனால், உடல் சூட்டை தணிக்கிறது. பரங்கிக்காய் சாறு கல்லீரல், சிறுநீரகத்துக்கு பலம் சேர்க்கிறது. சிறுநீரகக் கற்களால் பாதிப்படைந்தவர்களும், பித்தப்பையில் கோளாறு உடையவர்களும் தினம், மூன்று வேளை, பரங்கிக்காய் சாற்றை அரை டம்ளர் அளவு, 10 நாட்கள் பருகுவதால் சிறுநீரக மற்றும் பித்தப்பைக் கோளாறு நீங்கும்.
பரங்கிச்சாற்றில் அடங்கியிருக்கும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குத் தந்து பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்பைத் தருகிறது. பரங்கிச் சாற்றை தலைக்குத் தடவி வைத்திருந்து குளிப்பதால் தலைமுடி கொட்டுவது தவிர்க்கப்படுகிறது.
பரங்கிக்காயின் உட்புறச் சதையை விதைகள் நீக்கிய பின் வேகவைத்து பிசைந்து பசையாக்கிப் புண்களின் மீது கட்டுவதால் ஆறாத புண்களும் ஆறும்.
பரங்கிக்காயின் விதைகளைத் தோல் நீக்கிப் பொடி செய்து, 5 முதல் 10 கிராம் அளவுக்கு இருவேளை உள்ளுக்கு எடுத்துக் கொள்வதால், சிறுநீரக கற்கள் உண்டாவது தவிர்க்கப்படுகிறது.

%d bloggers like this: