பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

இதுகுறித்து தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமை பொது மேலாளர் என்.பூங்குழலி சென்னையில் கூறியதாவது: தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டம் 2016-17ம்  நிதி ஆண்டில் 2182 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டை விட இது 4 சதவீதம் அதிகம். தென் இந்தியாவில் உள்ள தொலைத் தொடர்பு வட்டங்களில் தமிழ்நாடு வட்டம்தான் முதலிடத்தில் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்

மாவட்டங்களை தவிர்த்த இதர மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு வட்டத்தில் 75.8லட்சம் செல்போன் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன.  மார்ச் மாதத்தில் 2.35 லட்சம் இணைப்புகளும், ஏப்ரல் மாதத்தில் 1.32தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக மட்டுமல்ல அவற்றை மிஞ்சும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ‘இதவிட ஒசந்தது எதுவுமில்லை’ என்ற பெயரில் 4 புதிய அதிரடி சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன்படி பிஎஸ்என்எல் செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் முதல் திட்டத்தின் கீழ்  339  ரூபாய்க்கு 28 நாளைக்கு தினமும் 3 ஜிபி இணைய டேட்டா இலவசம், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பேசும் அனைத்து வெளி அழைப்புகளுக்கும் இலவசம். அதேபோல் தனியார் நிறுவன எண்களுக்கு பேசும் போது தினமும் 25 நிமிடங்கள் இலவசம். அதற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் 25காசுகள் கட்டணம். இரண்டாவது திட்டத்தில்   333 ரூபாய் 90 நாட்களுக்கு  தினமும் 3ஜிபி இணைய டேட்டாவை பயன்படுத்தலாம். மேலும் 3வது திட்டத்தில் 349 ரூபாய் 28 நாட்களுக்கு தினமும் 2ஜிபி இணைய டேட்டாவும், அளவில்லா உள்ளூர், எஸ்டீடி அழைப்புகளும் இலவசம்.
கடைசியாக 4வது திட்டத்தில் 395 ரூபாய்க்கு 71 நாட்களுக்கு தினமும் 3ஜிபி இணைய டேட்டாவும், 3000நிமிடங்கள் பிஎஸ்என்எல் எண்களுக்கான அழைப்புகளும், 1800 நிமிடங்கள் தனியார் நிறுவன எண்களுக்கான அழைப்புகளும் இலவசம். இவை உள்ளூர், எஸ்டீடி என அனைத்து அழைப்புகளும் உள்ளடக்கியது. புதிய தலைமுறை தொழில்நுட்பத்தில் சாதாரண தொலைபேசிகளில் தரம் உயர்த்தப்படும். அதன்மூலம் செல்போனில் உள்ளது போன்ற வசதிகள்  சாதாரண தொலைபேசிகளிலும் கிடைக்கும். பிரீபெய்டு தொலைபேசிகளும் அறிமுகமாகும்.
முதல் கட்டமாக புதிய தலைமுறை தொழில்நுட்பத்தின் கீழ் 1.06லட்சம் இணைப்புகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டமாக 2.34 இணைப்புகள்  தரம் உயர்த்தும் ப ணிகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் 10.8லட்சம் இணைப்புகளும் தரம் உயர்த்தும் பணிகள் முடியும்.மாத வாடகை 675ரூபாய்க்கு அதிக மதிப்பில் உள்ள இணைய இணைப்புகளுக்கு பதிவிறக்க வேகம் 2எம்பியில் இருந்து 4எம்பியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் 4ஜி வேகத்தில் சேவை பெற வசதியாக  தமிழகத்தில் 566 தகவல் கோபுரங்கள் இந்த நிதியாண்டுக்குள் நிறுவப்படும். இவை தவிர மேலும் 1428 3ஜி தகவல் கோபுரங்கள் நிறுவப்படும்.இவ்வாறு பூங்குழலி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது முதன்மை பொது மேலாளர் ரவி, முதுநிலை பொதுமேலாளர் சந்தோஷம், பொதுமேலாளர்கள்  கருணாநிதி, மோகன், பூங்கொடி ஆகியோர் உடனிருந்தனர்.

%d bloggers like this: