ஹேர் டிப்ஸ்

பெண்கள் சிலர் தங்களது முடியை நீளமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க  வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் கடைகளில் கிடைக்கக்கூடிய ேஹர்க்ரீம்களை பயன்படுத்தி ஒவ்வாமை பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.  இதனால் முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்பட்டு மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள். பயனில்லாத ஹேர்க்ரீம்களை

பயன்படுத்துவதை விட்டுவிட்டு வீட்டிலே இயற்கையான முறையில் முடியை எப்படி நீளமாகவும் மென்மையாகவும் வைத்திருப்பது என்பதை பார்க்கலாம்.
ஒரு வெங்காயத்தை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு நன்றாக நசுக்கி வெங்காயச் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை கூந்தலின் நுனியிலிருந்து நன்றாகத் தடவி 10லிருந்து 15 நிமிடம் வரை ஊறவைத்து, பின்பு லேசான ஷாம்பூ கொண்டு கழுவ வேண்டும். வெங்காயச் சாறு முடியின் திசுக்களில் உள்ள கொலாஜன் அளவை அதிகரித்து நீளமாக வளரச்செய்கிறது. வெங்காயச் சாறில் உள்ள சல்ஃபர் முடியை மென்மையாக்கி பள பளவென்று வைத்திருக்கும்.

%d bloggers like this: