பீதியில் வாட்ஸ் அப் குரூப்!

பேங்க் அக்கவுண்ட்டே இல்லை என்றாலும் அலட்டிக் கொள்ளாமல், பேஸ்புக்ல அக்கவுண்ட் இல்லையா? எனக் கேட்டார்கள். இப்போது கொஞ்சம் டெவலப் ஆகி, என்ன குரூப்ல இருக்கீங்க? என்கின்றனர்.

ஃபேஸ்புக்கோ, வாட்ஸ் அப்போ இன்று ஏதாவதொரு குரூப்பில் இருக்க வேண்டும், நாட்டு நிகழ்வுகள் குறித்து உடனுக்கு உடன் நிலைத்தகவல்கள், மெசேஜ்கள், மீம்ஸ்கள் என தெறிக்க விடுவதே மேற்படி குரூப்களின் தினசரி அலுவல். நம்ம குரூப் பட்டையக் கிளப்பிடுச்சுல்ல என குழு உறுப்பினர்கள் (குறிப்பாக அட்மின்கள்) காலர் தூக்கி விட்டதை எல்லாம் பார்த்திருப்பீ்ர்கள். இந்த குரூப்களுக்க வந்திருக்கிறது ஒரு ஆப்பு.
சோஷியல் மீடியா குரூப்களில் வலம் வரும் கருத்துகள், மக்களிடம் எதிர்மறையான விளைவை உண்டாக்கினால், குரூப் அட்மின்கள் கைது செய்யப் படுவார்கள் என அறிவித்திருக்கிறது வாரணாசி மாவட்ட நிர்வாகம்.
அட்மின்களை அலெர்ட் பண்ணும் அறிவிப்பு திடீரென இப்போது ஏன்? ஒவ்வொருவருமே அட்மின்தான் என்கிற நிலையில் இந்தியாவில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர் இதற்க உடன்படுவார்களா? தகவல் தொழில்நுட்பச் சட்டம் என்ன சொல்கிறது? பல்வேறு மட்டத்தில் பேசினோம்.
ஒரு போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ இன்னிக்கு அது வலுபெற இந்த சோஷியல் மீடியா குரூப்கள் பெரிய உதவியா இருக்கு. தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா மக்கள் திரண்டதை சிறந்த உதாரணமாக சொல்லலாம். இப்படி மக்கள் திரள்றதை எந்த அரசாங்கமும் விரும்பறதில்லை. அதனால்தான் விதந்தி கிளம்புது, கலவரம் வரப் போகுதுங்கிற ரீதியில் என்னதயாச்சும் சொல்லி, இந்த மாதிரியான ஆர்டர்கள். அதுவும் குரூப் யாரோ ஒருத்தர் பதிவிடுற கருத்துக்கு குரூப்பை உருவாக்கினவரைக் கைது செய்வோம்கிறது இனி குரூப்னு ஒண்ணு ஃபார்ம் பண்ணுவன்னு அவரை மிரட்டத்தான். ரோட்டுல நாலு பேர் சேர்ந்து நின்னா சந்தேக கேஸ்னு விசாரிப்பாங்களே அதே மாதிரியான, கூட்டத்தை கலைக்கிற வேலை. கருத்துச் சுதந்திரதை நசுக்க நினைக்கிற இந்த முயற்சி சோஷியல் மீடியாவுல படு ஆக்டிவா இருக்கற மோடியோட தொகுதியிலயே தொடங்கப் படுதுங்கிறதுதான் முரண்பாடா இருக்கு என்கிறார் முகநூலில் தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வரும் யோகேஷ்.
இரண்டு வாட்ஸ்அப் குரூப்களை உருவாக்கி இயங்கி கொண்டிருக்கும் ஜெயந்தி கண்ணப்பன், டெக்ஜாலஜிங்கிறதும் கத்திதான். டக்டர் பயன்படுத்தினா ஆபரேஷனுக்கும் கிரிமினல் கிட்ட இருந்தா தப்பான காரியத்துக்கும்தான் பயன்படும்.
தனிப்பட்ட முறையிலேயே பொது வெளியில ஒரு தகவல் வெளியிடறப்ப பொறுப்போடதான் செயல்படணும். குழுவா சேர்கிறப்ப அட்மின்கிறவங்களுக்கு நிச்சயம் எக்ஸ்ட்ரா பொறுப்பு இருக்கு. ஒரு குரூப்ல வெளியாகிற தகவல் அப்படியே பல்வேறு குரூப்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கறதால், என்னால் அறிமுகப்படுத்தப்படற ஒருத்தரால பிரச்னைன்னா, அதுல எனக்கும் பொறுப்பு இருக்குதான். அதே நேரம் போலீஸ் இந்த ஆர்டரை தப்பா பயன்படுத்தாதுங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்னு தெரியலை. அதனால அட்மினுக்கு ஜெயிலுங்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்கிறார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் இதை அனுமதிக்கிறதா? சைபர் லா கன்சல்டண்ட் ராஜேந்திரனிடம் கேட்டோம்.
இந்த ஆர்டரை எதிர்த்து எதிர்த்து யாராச்சும் கோர்ட்டுக்குப் போனா கோர்ட் நிச்சயம் ரத்து செய்திடும். ஐ.டி. சட்டத்துல (2000) வாட்ஸ் அப், ஃபேஸ்புக், போன்றவற்றை இடைத்தரகர்கள்னுதான் வரையறை செய்திருக்காங்க. அதாவது அவங்க டேட்டாவுக்கு ஓனர் கிடையாது. அதை பாஸ் பண்ணி விடற சர்வீஸ் புரவைடர், அவ்வளவுதான், அவங்களை தண்டிக்கறதைப் பத்தியே எதுவும் சொல்லப்படலை. 2008ல் ஒரு திருத்தம் பண்ணினாங்க. (பிரிவு79). அதுல இநத அிடைத்தரகர்களுக்குன்னு சில பொறுப்புகள் இருக்கறதா மட்டும்சொல்லப்பட்டிருக்கு. பொது அமைதிக்க பங்கள் விளைவிக்கிற, குழு மோதல்களைத் தூண்டுகிற கருத்துகள் பகிரப்பட்டா அதை உடனே நீக்கிடணும்கிறது அதுல முக்கியமா இருக்கு. அதேநேரம் இந்தச் சட்டத்தோட பிரிவு 67 போர்னோகிராஃபி வீடியோக்களை லைவில் வெளியிடறவங்களைத் தண்டிக்கலாம்னு சொல்லுது.
வாட்ஸ் அப்பையே கேள்வி கேட்க முடியாதுங்கிற போது குரூப் அட்மின்களைக் கைது செய்யலாம்கிற அறிவிப்பு எப்படிச் செல்லும் அட்மின்கிறவர் இண்டர்மீடியரும் கிடையாது. வாட்ஸ் அப்போட பிரதிநிதியும், இல்லையே! அவரை அரெஸ் பண்ணுவோம்கிறது, நாலு பேர் ஓட்டல்ல உட்கார்ந்து சாப்பிடறப்ப அதுல ஒருத்தர் பேசுன ஒர பேச்சுக்காக அந்த ஓட்டல் முதலாளியை அரெஸ்ட் பண்ணுவோம்கிற மாதிரில்ல இருக்கு. எப்படிச் சாத்தியமாகும். அதேநேரம் அட்மின்கிறவருக்கு ஒரேயொரு பொறுப்பு உண்டு. ஒரு குரூப்ல பகிரப்பட்ட ஒரு கருத்தால பிரச்சனைன்னு போலீஸ் வந்து, கருத்தைப் பகிர்ந்தவர் பத்தின விவரம் கேட்டா அட்மின் தந்திடணும். அந்த இடத்துல மறுத்தா பிரச்சனையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார் இவர்.
தொழில்நுட்பம் வளர வளர அது சார்ந்த குற்றங்களும் பெருகிட்டே இருக்கு. ஆனா சைபர் கிரைம்களை டீல் செய்கிற தொழில்நுட்பப் பயிற்சி பாதுமானதா இல்லாததும், இண்டர்மீடியரி என்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்களா இருப்பதால் அவங்களை அணுகறதும் இந்திய விசாரணை அமைப்புகளுக்குப் பெரும் சவாலாக இருக்கு. சர்ச்சையான ஒரு தகவல் சமூக ஊடகங்கள்ல வெளியாகிறப்ப அதோட ஆரிஜினைக் கண்டுபிடிக்கிறது ரொம்பவே சிரமம். சம்பந்தப்பட்ட அந்த சர்வீஸ் புரவைடரை அணுகினா, முதல்ல, எங்களோட ரிட்டர்ன் பாலிசிப்படி நீங்க இண்டர்போல் மூலமாகத்தான் எங்களை அணுகணும்னு சொல்வாங்க. பெரிய புரஸீஜர். அதிகமான செலவாகும். அதனால தீவிரவாத செயல்பாடு உள்ளிட்ட அதி முக்கியமான விஷயங்கள்னாத்தான் அரசு அக்கறை காட்டும். ஒரு தகவலுக்காக அப்படி மெனக்கெட்டு சம்பந்தப்பட்ட புரவைடரை நாம அணுகிட்டோம்னே வச்சுக்கலாம். அந்தத் தகவல் அங்க நூறு சதவிகிதம் இருக்கும்கிறதுக்கு உத்தரவாதம் கிடையாது. எவ்வளவு நாளைக்கு அவங்ககிட்ட இருக்கலாம்னு சாஃபட்வேர் டிசைன் பண்ணியிருந்தாங்களோ அவ்வளவு காலம்தான் இருக்கும். அந்த நாட்கள் கடந்துட்டா அவங்களாலயே அந்தத் தகவலை நமக்கத் தர முடியாது. முக்கியத்துவம் வாய்ந்த கேஸ்களுக்கே இதுதான் நிலைமை. மத்தபடி உள்ளூர் அளவுல நடக்கற சின்னச் சின்ன சைபர் கிரைம்களைக் கண்டுபிடிக்க லோக்கல் போலீஸுக்கே இப்ப பயிற்சி தந்திட்டிருக்காங்க. என்கிறார். டெல்லியில் மத்தியப் புலனாய்வு நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சில ஆண்டுகள் பணிபுரிந்த சென்னையைச் சேர்ந்த மகேஷ்.
சைபர் குற்றங்களை டீல் செய்ய சரியான வழி தெரியாமல் இப்படி ஏதாவது வில்லங்க ஆர்டர்களை போட்டுவிட்டு, நெட்டிசன்கள் வச்சு செஞ்சிட்டாங்களே என்றால் என்ன சொல்வது?

%d bloggers like this: