பூசணி அளவில் சத்துகள் கொண்ட பூசணி விதைகள்!

மீபகாலமாக, பூசணி விதைகள்  பிரபலமான சிற்றுண்டி உணவாகக் கொறிக்கப்படுகின்றன. காய்ந்த விதைகளாகவோ உப்பிட்டு வறுக்கப்பட்ட உணவாகவோ உண்ணப்படுகின்றன. சமையல், பேக்கரி உணவுகள், இனிப்புகள், சாலட் மற்றும் ரொட்டி வகைகள் ஆகியவற்றின் மீது தூவுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

பூசணி விதைகளில் பல மேக்ரோ ஊட்டச்சத்துகளும், மைக்ரோ ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. புரதச்சத்துகள், பல வகையான ஃபைட்டோகெமிக்கல்ஸ், பாலி அன்சாச்சுரேட்டட் அமிலம், துத்தநாகம் ஆகியவையும் நிறைந்துள்ளன. அவற்றை அடிக்கடி ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளும்போது, உடலுக்குப் பல நன்மைகளைத் தருகின்றன.

பலன்கள்

* பூசணி விதைகள் ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும் மருத்துவ வல்லமைகொண்டது. இந்த நோயின் அறிகுறியான சிறுநீர் தொடர்பான கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே குறைக்க உதவுகிறது.

* பூசணி விதையைச் சிற்றுண்டியாக உண்ணும்போது, சிறுநீர்ப்பையில் கல் உருவாவது தடுக்கப்படுகிறது. உருவான கற்களைக் கரைக்கும் தன்மையும் பூசணி விதைக்கு உண்டு.

* பூசணி விதைகள் சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

* குடல் புழு காரணமாக வரும் வயிற்று வலியைக் குணப்படுத்துகிறது.

* பூசணி விதையில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள், ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அழற்சி மற்றும் ஆட்டோ இம்யூன் நோய்களைத் தடுக்கவல்லது.

* நாள் ஒன்றுக்கு 10 – 15 பூசணி விதைகளை உட்கொள்வது நல்லது. கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள்  இதைத் தவிர்க்கலாம்.

எப்படிச் செய்வது?

* பூசணிப் பழத்தில் இருந்து விதையை எடுத்து, சதைப்பகுதி துளியும் இல்லாமல் நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு, சுத்தமான துணியில் பரப்பி, வெயிலில் ஒரு மாதம் வரை காய வைக்க வேண்டும்.

* ஒரு கடாயில் விதைகளைப் பரப்பி, சட்டியில் ஒட்டாதவாறு வறுத்துக்கொண்டே இருக்க வேண்டும். மிருதுவான பக்குவத்துக்கு வந்த பிறகு, சுவைக்காகச் சிறிது மசாலாத்தூள் தூவி இறக்கிவிடலாம்.

%d bloggers like this: