Advertisements

அவசரமாகக் கிளம்பும் போது அவஸ்தைப்படாதீர்கள்!

ச்சோ… புளூ கலர் கம்மல் ஒண்ணு இருக்கு; இன்னொண்ணு எங்கே இருக்குனு தெரியலையே. டிரெஸ்ஸுக்கு மேட்சிங்கா வளையலைத் தேடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது’ எனக் காலையில் அவசர அவசரமாகக் கிளம்பும் நேரத்தில் புலம்பும் பெண்களுக்காகவே இந்தப் பிரத்யேக டிரெஸ்ஸிங் டேபிள் டிப்ஸ்… 

பொட்டு, லிப்ஸ்டிக், நெக்லஸ், மோதிரம், வளையல், கம்மல் என உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலான ஆபரணங்கள் எக்கச்சக்கம். அதேபோல சீப்பு, நெயில் கட்டர், மேக்கப் சாதனங்கள் என டிரெஸ்ஸிங் டேபிளில் குவியும் பொருள்கள் அன்லிமிடெட். ஆரம்பத்தில் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதுதான் நம் லட்சியமாக இருக்கும். ஆனால், போகப்போக அதெல்லாம் காற்றில் பறந்து போயிருக்கும். வாங்கும்போது கண்களில் ஒற்றிக்கொள்ளும் அளவுக்கு அழகாக இருக்கும் டிரெஸ்ஸிங் டேபிள் அடுத்த சில நாள்களுக்குள் போர்க்களக் காட்சியைப் போலக் கலைந்து கிடக்கும். அதற்கு என்னதான் தீர்வு என்று கேட்டால் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பதுதான் முதல் தீர்வு.

வளையல்கள் ஒற்றை வளையல்களாக இருந்தால், அவற்றை வண்ணங்களுக்கு ஏற்ப மொத்தமாக ஒரே வரிசையில் வரும்படி ஒரு பெட்டியிலோ அல்லது டிரெஸ்ஸிங் டேபிளில் இருக்கும் வளையல் ஸ்டாண்டிலோ மாட்டிவைத்தால், ஆடைக்கு ஏற்ப உடனடியாக  எடுத்து அணிந்துகொள்ளலாம்.

  செட் வளையல்கள் அல்லது டஜனாக வரும் வளையல்கள் என்றால் கழற்றும்போது அவற்றை மொத்தமாக நூலில் கட்டி வைத்துக் கொண்டால்,  தொலைந்து போகாது.

  ஸ்டிக்கர் பொட்டைக் கண்ணாடியில்  ஒட்டும் பழக்கம்  இருந்தால் முதலில் அதை மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வாறு ஒட்டி வைத்திருப் பதைப் பார்க்கும்போதே தேவையில்லாமல் மன உளைச்சல் உருவாகலாம். அதனால் பொட்டுகளை மொத்தமாகப் பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். சாந்துப் பொட்டோ  குங்குமப் பொட்டோ வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் பொட்டு கலைந்துவிட்டால், அதைக் கையால் தேய்த்து, கண்ணாடியின் மீதோ அல்லது சுவரின் மீதோ பூசுவதைத் தவிருங்கள்.

  நெயில் பாலிஷ் போட்ட பிறகு, பாட்டிலைச் சரியாக மூடி வையுங்கள். இல்லாவிட்டால் நெயில் பாலிஷ் கொட்டி வீணாகிவிடும். வண்ணங்களுக்கு ஏற்ப நெயில் பாலிஷ் பாட்டில்களை அடுக்கி வைக்கும்போது, பார்க்க அழகாக இருப்பதுடன் புத்துணர்வையும் கொடுக்கும். லிப்ஸ்டிக்குகளையும் அப்படியே பராமரிக்கலாம்.

  கழுத்துக்கான ஆபரணங்களை மொத்தமாக ஓரிடத்தில் போட்டுவைத்தால் அவை ஒன்றோடு ஒன்று சேர்ந்துகொண்டு சிக்கலாகிவிடும். அதனால், ஒவ்வொன்றாக அதற்கான தொங்கலில் மாட்டி வைப்பது அவசரத்தில் பயன்படுத்த உதவும்.

கம்மல்களை வைக்கும்போது, அதன் திருகாணிகளைச் சரியாகப் பொருத்திய பிறகு ஒவ்வொன்றாகப் பிரித்து வையுங்கள். ஒரு அட்டையில் துளைகள் போட்டு அதற்குள் கம்மல்களைப் பொருத்தி வைத்துக்கொண்டால் உடனடியாக எடுத்து மாட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.

  இதேபோல மேக்கப் கிட்களில் வரும் மஸ்காரா, ஐலைனர், காம்பேக் பவுடர் ஆகியவற்றை அதற்குரிய பெட்டியில் பாதுகாப்பதே சரி. காது துடைக்கும் பட்ஸ், மேக்கப் பிரஷ், சீப்பு போன்றவற்றை அசுத்தமாக வைத்திருக்காமல், சுத்தமாக ஒரு ட்ரேயில் வைத்துக்கொள்ளலாம்.

இவற்றை எல்லாம்  கடைப்பிடித்தால், நம் டிரெஸ்ஸிங் டேபிளைப் பார்த்தால், நமக்கே பெருமையாக இருக்கும். நாம் மட்டும் அல்ல… நம் அழகுசாதனப் பொருள்களும் சுத்தமாய் இருப்பதே ஆரோக்கியத்துக்கு நல்லது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: