ஹேப்பி ஹாலிடே!

ன்றைய சமூகத்துக்கு `வீக்எண்ட்’ என்றாலே தீபாவளி, பொங்கல்போலக் கொண்டாட்டம்தான்.  வேலையிலிருந்து விடுதலை, டிராவல் நேரம் என  ஆளுக்கொரு ஆனந்தம். வாரம் ஒருநாள் ஓய்வில் வேறு சில விஷயங்களையும் செய்யலாம்.
வெளியே செல்வது நல்ல ஆப்ஷன்


சிறு பயணம் செல்லலாம். முடியாதவர்கள் சின்னதாய் ஒரு வாக்கிங் நடந்துவிட்டு வரலாம். வெயில் உங்களைப் பார்க்கட்டும். தென்றல் உங்களோடு தவழட்டும். வெளியே சென்று இயற்கையைக் கவனியுங்கள். மனம் இலகுவாகும்.
ஆபீஸ் வேலைக்கு லீவு
வேலையை அலுவலக வாசலிலேயே விட்டுவிட்டு வந்துவிடுங்கள். அதை வீட்டுக்குக் கொண்டுவர வேண்டாம். வீடு என்பது வாழ்வதற்கு மட்டும்தான். உங்களை மகிழ்விக்கும் விஷயங்களை மட்டுமே வீட்டுக்குள் அனுமதியுங்கள்.

சிரிப்பது ஒரு கண்டிஷன்
வீடியோ, காடிமடிப் படம், ஃபன் வீடியோஸ், செல்லப் பிராணிகள், குழந்தைகளுடன் விளையாடுவது எனச் சிரிப்பதற்காக மட்டும் நேரம் ஒதுக்குங்கள். என்ஜாய் என்பதே இதன் நோக்கம்.
மூச்சுப் பயிற்சி
எதைக் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த மூச்சுப் பயிற்சியை மட்டும் தகுந்த நிபுணரிடம் கற்றுக்கொண்டு செய்யுங்கள். மூச்சுப் பயிற்சி, உங்கள் உயிரைப் பாதுகாக்கும் உயிர் பயிற்சி.
கண்கள் மூடி இருப்பது
தெரிந்தவர்கள் தியானம் செய்யலாம். தெரியாதவர்கள் கண்கள் மூடி உடலை, மூச்சை, இதயத் துடிப்பை, வயிற்றின் அசைவுகளைக் கவனிக்கலாம். இதன் நோக்கம் ஓய்வு மட்டுமே. உடலுக்குத் தரும் ஓய்வு மனதையும் நல்வழிப்படுத்தும்.

%d bloggers like this: