Advertisements

1 – 15 நிமிடங்களில் மனஅழுத்தத்துக்கு ‘குட் பை’

னஅழுத்தம் என்பது அடிக்கடி நமக்கு ஏற்படுவதுதான். மன அழுத்தத்துக்கு நாம் ஆட்படும் நேரங்களில், மன அழுத்தத்திலிருந்து விடுபட ஓர் எளிமையான தீர்வு, நமக்கு நாமே பிரேக்

எடுத்துக்கொள்வதுதான். நம் மனதுக்கு நாம் தரும் ஒவ்வொரு பிரேக்கும் ‘மைண்ட் – பாடி மெடிச’னாக அமைந்து நம் மனதை ரிலாக்ஸ் மூடுக்கு மாற்றுகிறது. இப்படிச் சில வாரங்களுக்குச் சிறிது சிறிதாக நமக்கு நாமே பிரேக் எடுத்துக்கொண்டால் நரம்பு மண்டலம் சீராக இயங்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் ஆட்டமும் அடங்கும். மன அழுத்தத்தைப் போக்க ஒரு நிமிடம் முதல் 15 நிமிடங்கள் வரையிலான சில பிரேக்குகள் இங்கே…
2 நிமிடங்கள் மூச்சை ஆழ்ந்து சுவாசித்து விடுதல்

ஆழ்ந்த சுவாசம் என்பது தொப்புள் பகுதியின் கீழிருந்து சுவாசித்தல். அதுவே, ஆழ்ந்து சுவாசித்தல். இப்படி நிதானமாக 10 முறை சுவாசித்தால், மனம் இலகு வாகும். இப்படிச் சுவாசிக்கும்போது, வயிறும் ஒரு இன்ச் அளவு பெரியதாகி மீண்டும் பழைய நிலைக்கு வரும்.
2 நிமிடங்கள் ஒரு துண்டு சாக்லேட் சாப்பிடுவது…

இரண்டு வாரத்துக்குத் தொடர்ந்து சாக்லேட் சாப்பிடவேண்டும். அதுவும் ஒரு துண்டு கோகோ சாக்லேட் நல்லது. சாப்பிடும்போது கவனம் அனைத்தும் சாக்லேட்டின் மீதே இருக்கவேண்டும். ரசித்து, ருசித்து சாக்லேட்டின் சுவையில் மூழ்குவது சிறப்பு.
3 நிமிடங்கள் பிடித்த புகைப்படத்தைப் பாருங்கள்

சுற்றுலா சென்று வந்த நினைவாக உள்ள படமோ அல்லது குழந்தையின் புகைப்படமோ, அதை அப்படியே உற்றுப் பாருங்கள். அந்தப் படத்தைப் பற்றிய நினைவை  அசை போடுங்கள். ஃபன் வீடியோஸ்கூடப் பார்க்கலாம்.
10 நிமிடங்கள் கிராஃப்ட் செய்யலாம்

செடிகள் வைக்கத் தொட்டி செய்வது, காகிதப் பை, நகைப் பெட்டி, போட்டோ ஸ்டாண்ட், குட்டிக் குட்டி பொம்மைகள் எனத் தங்களுக்குத் தெரிந்தவற்றைச் செய்யலாம்; அல்லது செய்யக்கற்றுக்கொள்ளலாம்.
15 நிமிடங்கள் ஹெல்த்தியான டீ குடிக்கலாம்

மூலிகை டீ, இஞ்சி டீ, செம்பருத்தி டீ, பிளாக் டீ போன்ற எந்த வகை டீயாக இருந்தாலும் சரி. அதை நீங்களே தயாரித்து, ரசித்துக் குடியுங்கள். இதை, ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்வது நல்லது. உங்களுக்கு நீங்களே கொடுக்கும் பூஸ்டர்.

Advertisements
%d bloggers like this: