உங்கள் முகமும் பொலிவு பெறும்!

கோடை காலத்தில் வெயிலில் அலையும் பலருக்கும், “தோல் கருத்துப் போய் விடுமே’ என்ற கவலை இருப்பதை காண முடிகிறது. குறிப்பாக, இளம்பெண்கள், முகத்தையும், கைகளையும், கர்ச்சீப் கொண்டும், உறை கொண்டும் மூடியபடி வாகனங்களில் செல்வதைக் காணும்போதுதான், பலருக்கும் வெயிலின் கொடுமை புரிகிறது. வெயில் கொடுமையில்

இருந்து காத்துக் கொள்ள விரும்புவோருக்கு, இதோ பயனுள்ள டிப்ஸ்:
சூரிய ஒளி உடலில் படுவதால், நமக்கு ஒமேகா 3 என்ற வைட்டமின் கிடைக்கிறது. இந்த வைட்டமின் பல நோய்களை தடுக்கிறது. ஆனால், வெயில் தொடர்ச்சியாக உடலில் படும்போது சருமத்தின் நிறம் கருமையாக மாறுகிறது. குறிப்பாக, முகத்தில் படும்போது முகம் கருத்துவிடுகிறது.
அதற்கு, ரசாயனம் கலந்த கிரீம்களை சருமத்தில் பயன்படுத்துவதை விட, இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு “மாஸ்க்’ போடுவது
நல்லது. அப்படிச் செய்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தில் கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், இரண்டு டீ ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.
இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.
வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவை அதிகரிக்க மேலும் வழிகள் இருக்கின்றன. 4 டீ ஸ்பூன் கடலை மாவுடன், 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள், சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகம் பொலிவாகி விடும்.
பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவி வந்தாலும், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட
கருமையை போக்கி விடலாம்.
சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக தேய்த்து விட வேண்டும். பின் முகத்தைக் கழுவிய பிறகு, வைட்டமின் ஈ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விடலாம். இப்படிச் செய்தால், முகப்பொலிவு நிச்சயம்.
எலுமிச்சை ஓரு சிறப்பான ப்ளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். அந்த எலுமிச்சையின் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். குளிக்கும்போது இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமைகள் அகலும்.
வெள்ளரிக்காய் கூட சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.
கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

%d bloggers like this: