ஏன்? எதற்கு? எதில்? – வைட்டமின் ஏ

மது உடலில் வரும் நோயை எதிர்க்கும் ஒரு போராளி. அவை, நீரில் கரைபவை மற்றும் கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைப்படும். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் மிக முக்கியமானது வைட்டமின்-ஏ.

 

வைட்டமின்-ஏ வகைகள்
* கரோட்டின் (Carotene)
* ரெட்டினால் (Retinol)
* லுடீன் (Lutein)

* பீட்டா கரோட்டீன் (Beta carotene)
* ஸியாக்ஸாந்தின் (Zeaxanthin)
குறைபாட்டால் வரும் பிரச்னைகள்
* கண்களில் வெண்புள்ளிகள் தோன்றும் . கண்கள் பொலிவை இழந்து, வறட்சியுடன் காணப்படும்.
* தீவிரமாகும்போது கருவிழி பாதிக்கப்பட்டு, சிறிய வயதிலே பார்வையை இழக்க நேரிடும்.
* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, வைட்டமின்-ஏ உதவுகிறது. இந்தக் குறைபாட்டால் நோயை எதிர்க்கும் சக்தியை இழக்க நேரிடும்.
* முடி உதிர்தல், தோல் வறட்சி போன்ற அறிகுறிகள் தோன்றும்.
எவ்வளவு தேவை?  (இன்டர்நேஷனல் யூனிட்டுகளில்)
ரெட்டினால்: 1 முதல் 6 வயது வரை 400
பீட்டா கரோட்டின்:  3200
6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு
ரெட்டினால் 350
பீட்டா கரோட்டின் 2800
ஆண்கள் பெண்கள்  மற்றும் 7&17 வயதினருக்கு: ரெட்டினால்  600 , பீட்டா கரோட்டின் 4800

கர்ப்பிணிகளுக்கு:
ரெட்டினால் 800 , பீட்டா கரோட்டின் 7600
தாய்ப்பால் ஊட்டும்போது : ரெட்டினால் 950, பீட்டா கரோட்டின் 6400
எதில் வைட்டமின் ஏ?
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மீன் எண்ணெய் மாத்திரைகள், கேரட், பட்டாணி, முள்ளங்கிக்கீரை, உலர்ந்த ஆப்ரிகாட், சிவப்பு குடமிளகாய், சிறிய ஆரஞ்சுப் பழம் (Cantaloupe): ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் சிறிய வகை ஆரஞ்சுப் பழம்), கடுகுக் கீரை, பாப்ரிகா (Paprika) : தாளிக்கும் மூலிகை வகை,  முளைக்கீரை, பப்பாளி, ஓட்ஸ், லெட்யூஸ், மாம்பழம், தக்காளி, மஞ்சள் பூசணி (பரங்கிக்காய்) போன்றவற்றில் அதிகம் உள்ளது.

ஒரு மறுமொழி

  1. முருங்கை இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.

%d bloggers like this: