அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
வருமான வரிதானே… பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. காரணம், அப்போது வருமானம் குறைவு. எனவே, வரி செலுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கும் இல்லை. ஆனால் இப்போது கால ஓட்டமும், ஊதிய நிலைகளில் ஏற்பட்ட மாற்றமும் சேர்ந்து, பணியாளர்களுக்கான சம்பளத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தியுள்ளதால், வரி கட்ட வேண்டிய நிலைக்கு பலரும் உயர்ந்துள்ளனர்.
உடலை நெறிப்படுத்தும் நன்னாரி!
த்த மருத்துவத்தில், நன்னாரி வேர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது இது. கெட்டியான வேர் மணம் மிக்கது. கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும்.
சர்க்கரையை அடக்கி ஆளும் பிஸ்தா!
வீட்டில் பொதுவாக, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு போன்ற பருப்பு வகைகளைதான் உணவில் அதிகம் சேர்த்து வருகிறோம். பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற பருப்புகளை உண்பது மிகவும் குறைவு. இதற்கு காரணம் இவற்றின் விலை அதிகம் என்பதே. ஆனால் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் பிஸ்தா பருப்பு சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இதன் மூலம், பல நோய் பிரச்னைகள் தீரும்.
உடையும் ‘சிதம்பர’ ரகசியம்!
தமிழகத்தில் அ.தி.மு.க வட்டாரத்தையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்த ரெய்டு பூதம், இந்தமுறை காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 16-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டுக் கதவைத் தட்டியது, சி.பி.ஐ படையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு. கார்த்தி சிதம்பரத்தைக் குறிவைத்து, சென்னை, டெல்லி, மும்பை, குர்கான் ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ ரெய்டு நடந்தது. எல்லா ரெய்டுகளுக்கும் பின்னால் அதிகாரக் காரணங்கள் இருப்பதுபோல், அரசியல் காரணமும் இருக்கும். கார்த்தி சிதம்பரம் விவகாரத்திலும் அப்படிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன.
அதிகாரக் காரணங்கள் என்ன?
பன்னிரு ராசிகளும் பரிவார தெய்வங்களும்!
எந்த ஒரு கோயிலாக இருந்தாலும், மூலவருடன் பரிவார தெய்வங்களும் கோஷ்ட மூர்த்தங்களாகவும், தனிச் சந்நிதி தெய்வங்களாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை நாம் தரிசிக்கலாம்.
சிவாலயங்களில் பைரவர், துர்கை, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, வீரபத்திரர், மகா விஷ்ணு, லிங்கோத்பவர், முப்பெருந்தேவியர், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், சனீஸ்வரர், நவகிரகங்கள் போன்ற தெய்வங்கள் அருள்பாலிப்பார்கள்.