உடலை நெறிப்படுத்தும் நன்னாரி!

த்த மருத்துவத்தில், நன்னாரி வேர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது இது. கெட்டியான வேர் மணம் மிக்கது. கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும்.

இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். ஒரு பிடி பசுமையான நன்னாரி வேரை சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு, இடித்து, நீரில் இட்டு கொதிக்க வைத்து ரசம் வைத்து, சிறிதளவு சர்க்கரை சேர்த்து, வெறும் வயிற்றில், அரை டம்ளர் அளவு குடித்தால், சிறுநீர் எரிச்சல் இருந்தால் குணமாகும்.
நன்னாரி வேர்த்தூள் இரண்டு தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்துக் கலக்கி குடிக்க, சிறுநீர் கட்டு குணமாகும். நன்னாரி வேர்த்தூள் ஒரு பங்குடன், 25 பங்கு தண்ணீர் மற்றும் சர்க்கரை, 50 பங்கு சேர்த்து, மணப்பாகு செய்து, 15 முதல் 25 மி.லி., வீதம், தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வர, உடல் சூடு குறையும்.
செரிமானக் கோளாறுக்கு விடிவு: பச்சை நன்னாரி வேர், 5 கிராம் எடுத்து அரைத்து, ஒரு டம்ளர் பாலில் கலக்கி குடிக்க, வறட்டு இருமல் குணமாகும். உடலில் உஷ்ணத்தை தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலி, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றுக்கு, நல்ல மருத்துவமாக விளங்குகிறது.
பச்சை நன்னாரி வேர், 5 கிராம் அளவு அரைத்து, 200 மிலி., பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட, நரையை மாற்றும் தன்மை கொண்டது.
நன்னாரி வேர்ப்பட்டையை, நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும். நன்னாரி வேரை வாழை இலையில் வைத்து கட்டி, எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர, சிறுநீரக நோய்கள் அனைத்தும் விலகும்.
குளிர்ச்சி தரும்: நன்னாரி வேர்ப் பொடியுடன், சோற்றுக் கற்றாழை சாறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும். வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும். வேர் சூரணம் அரை கிராம், காலை, மாலையில் வெண்ணையில் கலந்து உட்கொண்டால், ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் உட்கொண்டால், காமாலை தீரும்.
கல்லீரல் நோய் குணமாக, பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம், இன்றளவும் உண்டு. உடல் குளிர்ச்சி அடைய, வெயில் காலங்களில் நன்னாரி வேரை நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திக் காயவைத்தோ, மண்பானையில் இட்டு, சுத்தமான நீரை அதில் ஊற்றி வைத்திருந்து, நீரை குடித்தால், உடல் குளிர்ச்சியடையும்.
வியர்வை நாற்றம் நீங்க, மிளகு, உப்பு, புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய் சேர்த்து வதக்கி, 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும். தோல் நோய்கள், ஜீரணப் பிரச்னை ஆகியவை குணமாக, நன்னாரி வேரை சிறிதளவு எடுத்து இடித்து, நீரில் காய்ச்சி வடிகட்டி, 100 மில்லியளவு, இரு வேளையாக குடித்து வந்தால், இப்பிரச்னைகள் தீரும்.

%d bloggers like this: