எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்
உயிர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் மாம்பழம் முக்கியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். “உடல் சூடு அதிகரிக்கும்’ என்று பலரும் மாம்பழம் சாப்பிட தயங்குகின்றனர். ஆனால், இதற்கு மருத்துவ அடிப்படையில் எந்த சான்றும் இல்லை என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.
என்பிஎஸ்… கைநிறையக் கிடைத்த லாபம்!
என்பிஎஸ் (நேஷனல் பென்ஷன் சிஸ்டம்) திட்டத்தில் முதலீடு செய்வது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். என்பிஎஸ் முதலீட்டின் மூலம் கிடைத்த லாபம், நிஃப்டி இண்டெக்ஸ் தந்த லாபத்தைவிட அதிகமாக இருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
வினோத ஆற்றல் கொண்ட வேம்பு எண்ணெய்
நம் முன்னோர்களின் அரிய இயற்கை மருந்தாக வேப்ப எண்ணெய் இருந்துள்ளது. கிராம மருந்தகம் என்று போற்றப்படும் வேம்பின் ஒவ்வொரு பாகமும் சிறந்த மருத்துவ குணமுடையதாகும்.
தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறந்த கிருமி நாசினியாக வேப்ப எண்ணெய் பயன்படுகிறது. வேப்ப இலை, காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. வேப்பம்பழ விதைகளில் இருந்து வேப்ப எண்ணெய், தயாரிக்கப்படுகிறது. கசப்புத்தன்மையுள்ள இந்த எண்ணெய், மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுகிறது.
விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!
நமது பிரபஞ்சம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.