என்பிஎஸ்… கைநிறையக் கிடைத்த லாபம்!

ன்பிஎஸ் (நேஷனல் பென்ஷன் சிஸ்டம்) திட்டத்தில் முதலீடு செய்வது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம்  அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். என்பிஎஸ் முதலீட்டின் மூலம் கிடைத்த லாபம், நிஃப்டி இண்டெக்ஸ் தந்த லாபத்தைவிட அதிகமாக இருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

என்பிஎஸ்-ல் டயர்-1 பென்ஷன் ஃபண்டில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் (Equity), கார்ப்பரேட்  கடன் ஃபண்டுகள் (Corporate Debt), அரசு பாண்டு ஃபண்ட் (Government Bonds) என மூன்று விதமான திட்டங்கள் உள்ளன. இந்த மூன்று திட்டங்களுமே  நல்ல லாபம் தந்துள்ளன.

பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டில் ஹெச்டிஎஃப்சி நிறுவனம் நிர்வகிக்கும் ஃபண்ட் கடந்த ஓராண்டு காலத்தில் அதிகபட்சமாக 26% லாபம் தந்திருக்கிறது. குறைந்தபட்சமாக எல்ஐசி ஃபண்ட் 22.5% லாபம் தந்திருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் டெபாசிட் செய்யப்படும் ஃபண்டுகளில் கோட்டக் நிறுவனம் நிர்வகிக்கும் ஃபண்ட் கடந்த ஓராண்டு காலத்தில் அதிகபட்சமாக 11.4% வருமானம் தந்திருக்கிறது. அரசு பாண்டு ஃபண்டுகளைப் பொறுத்தவரை, எல்ஐசி நிறுவனம் நிர்வகிக்கும் ஃபண்டானது கடந்த ஓராண்டு காலத்தில் அதிகபட்சமாக 13.4% வருமானம் தந்திருக்கிறது. (பார்க்க அட்டவணை)
கடந்த ஓராண்டு காலத்தில் மட்டுமல்ல, கடந்த மூன்றாண்டு காலத்திலும் குறைந்தபட்சமாகப் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் 11 சதவிகிதத்தில் தொடங்கி, அதிகபட்சமாக 12.9% வரை லாபம் தந்திருக்கின்றன. 
என்பிஎஸ் திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபம் மற்ற முதலீடுகள் மூலமான லாபத்தைவிட அதிகமாக இருப்பதால், முதலீட்டின் ஒரு பகுதியை இதில் போடலாம்.  பென்ஷன் என்பதே இல்லாமல் போய்விட்ட இந்தக் காலத்தில், நம் ஓய்வுக் காலத்தை இனிதாகக் கழிக்க என்பிஎஸ் முதலீடு  உதவும் எனலாம்!

%d bloggers like this: