வினோத ஆற்றல் கொண்ட வேம்பு எண்ணெய்

நம் முன்னோர்களின் அரிய இயற்கை மருந்தாக வேப்ப எண்ணெய் இருந்துள்ளது. கிராம மருந்தகம் என்று போற்றப்படும் வேம்பின் ஒவ்வொரு பாகமும் சிறந்த மருத்துவ குணமுடையதாகும்.
தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறந்த கிருமி நாசினியாக வேப்ப எண்ணெய் பயன்படுகிறது. வேப்ப இலை, காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. வேப்பம்பழ விதைகளில் இருந்து வேப்ப எண்ணெய், தயாரிக்கப்படுகிறது. கசப்புத்தன்மையுள்ள இந்த எண்ணெய், மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுகிறது.

இரவில் படுக்கும்முன் வேப்ப எண்ணெய் தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் öசாரியாசிஸ் நோய் குணமாகும். வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை, 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.
வேப்ப எண்ணெய்யுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின் குளிக்கவும். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருக்கும் ஈறு, பொடுகு, பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம். வேப்ப எண்ணெய்யை, காலை, மாலை இரு வேளைகளிலும், 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும். கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப எண்ணெயை தெளித்து வந்தால், கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.
வேப்ப எண்ணெய் சரும ஆரோக்கியத்திற்கும் பளபளப்புக்கும் உதவும்; நோய் தடுப்பாற்றலை மேம்படுத்தும்; ரத்த சர்க்கரையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்; உணவு செரிமான வழி ஆரோக்கியத்திற்கும் நல்ல பயன் தரக்கூடியது. கொழுப்பு மற்றும் நீர்சத்து வீதத்தைப் பராமரிக்கவும், சுவாசத்தை ஊக்குவித்து, சுவாசவழி அமைப்பை சுத்தப்படுத்தவும், பயன்படுகிறது. சிறுநீர் வழித்தடம், சுவாச அமைப்பு மற்றும் ரத்த ஓட்ட பராமரிப்புக்கு வேம்பு உதவுகிறது.
நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக வேப்ப மரத்தின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு இயற்கை ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப் படுகின்றன. வேப்ப மரத்தின் இலைகள், பழங்கள், அடிமரப் பட்டை, வேப்ப எண்ணெய் ஆகியவை, சருமம், நகங்கள், உச்சந்தலை, பற்கள், ஈறுகளுக்கு கணக்கிலடங்காத நன்மைகளை வழங்குகின்றன.
வேப்ப எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதமளித்து பாதுகாப்பதுடன், துர்நாற்றமடிக்கும் வியர்வைக்கும் முடிவு கட்டுகிறது. பற்கள் மற்றும் ஈறுகள் வலிமைக்கும் ஆரோக்கிய பராமரிப்புக்கும் உதவும் வேம்பு, ஒட்டுமொத்த வாய் சுகாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளது. சருமத்தின் நிறம், முடியின் இயற்கை நிறத்தையும் உயிர் துடிப்புடன் இருக்க செய்யும் திறன் வேப்ப எண்ணெய்க்கு உள்ளது. வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியத்திற்குப் பயன்படுகின்றன. குறிப்பாக, வேப்பிலையின் மருத்துவப் பயன்கள் ஏராளம். 140க்கும் அதிகமான கூட்டுப்பொருள்கள் வேப்ப மரத்தின் பாகங்களிலிருந்து தனியாகப் பிரித்தெடுத்து, மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.
வேப்ப மரத்திலிருந்து, வெப்பம் அல்லது குளிர்ச்சி பதப்படுத்துதல் முறையில் பிரித்தெடுக்கப்பட்ட நீர்ம திரவங்கள், சருமம், நோய் தடுப்பாற்றல், ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் கல்லீரல் செயல்பாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன.

%d bloggers like this: