நாள் குறிக்கிறார் ரஜினி!
சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் கழுகார் நம்முன் ஆஜரானபோது அவருக்காக இளநீர் வைத்திருந்தோம். ஸ்ட்ரா போட்டு மெல்ல உள்ளே இழுத்த கழுகார், ‘‘ரஜினி அரசியல் தொடர்பான அனல், இதைவிட அதிகமாக அடிக்க ஆரம்பித்துள்ளது” என்றார். இளநீரை முடிக்கும்வரை காத்திருந்தோம்.
காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால்?
காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன செய்வெதன்று தெரியாமல் திணறுவோம். அதற்கும் ஒரு சில எளிய வழி உள்ளன. அதாவது, காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் உடனடியாக காதினுள் எண்ணையையோ (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்) உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். இதனால், காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைபட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். பிறகு அதை எடுத்து விடலாம்.
சருமத்திற்கு வேண்டும் தினமும் கவனிப்பு!
நம்முடைய சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சருமம், எண்ணைப் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் மற்ற இரண்டு சருமம் உள்ளவர்கள், சருமத்தை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும்.