தினகரன் ரிலீஸ்… திடுக் எடப்பாடி!
டெல்லியில் மழை பெய்ததால் வெயில் குறைந்திருக்கிறது’ என்று கழுகாரிடமிருந்து மெசேஜ். அவர் டெல்லியில் இருப்பதைப் புரிந்து கொண்டுப் போனில் பிடித்தோம். ‘‘டி.டி.வி.தினகரனுக்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்து விட்டதே?’’ என்றோம்.
‘‘ஆமாம்! டெல்லி போலீஸ் ‘அந்த ஆதாரம் இருக்கிறது… இந்த ஆதாரம் இருக்கிறது…’ என இழுத்தார்களே தவிர, தினகரனைச் சிறையில் இன்னமும் வைத்திருக்கத் தேவையான காரணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை. அதனால் சுலபமாக ஜாமீன் கிடைத்துவிட்டது. 41 நாள் சிறைவாசம் முடிந்து வெளியில் வந்திருக்கிறார் தினகரன்.”
‘‘இனி தீவிர அரசியலில் ஈடுபடுவாரா?’’
படைப்பாளிகளும் பைத்தியக்காரத்தனங்களும்!
புதுமையானதும் மதிப்பு மிகுந்ததுமான ஒன்றை உருவாக்குவதே படைப்பாற்றல். தன்னைத்தானே அழித்துக்கொள்வதும் நிஜத்தை விட்டு விலகி அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பாதை மாறிச் செல்லும் குழப்பமான நடத்தையே பைத்தியக்காரத்தனம் என்பது…நேரெதிர் முனையில் நிற்கும் இந்த இரண்டு குணாதிசயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றால் நம்புவீர்களா? ஆம், மனோதத்துவ ரீதியாக இந்த இரண்டுக்கும் தொடர்பு உண்டு. இன்று, நேற்றல்ல… பல காலமாகவே படைப்பாற்றலுக்கும் மூடத்தனத்தின் உச்சத்துக்கும் உள்ள உறவு குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?
பரபரப்புக்குப் பஞ்சமில்லாதது காலை வேளை. பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதே பெரும்பாடு. அப்படியே தயாரித்தாலும், அதைச் சரியாகச் சாப்பிடாமல் ஓடுவதே பலரின் இயல்பு. தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்கவேண்டியது அவசியம். அதற்கு முட்டையைச் சேர்த்துக்கொண்டால் போதும்… நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம். முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக்கூடியவை. சரி… காலை உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பார்க்கலாம்…
கொழுப்பை கரைக்கும் செம்பருத்தி பூ!
இன்றைய பரபரப்பான, வேகமான உலகில் மனிதர்கள் பலருக்கும் எதிர்பாராமல் தாக்கும் நோய் என்றால் அது இதயநோய்தான். இதயம் பலகீனமானவர்களுக்கு மட்டும் தான் இது வரும் என்றில்லை. நல்ல ஆரோக்கியமான, திடகாத்திர மாந்தரையும் கூட, இந்த இதய நோய் திடீரென தாக்குவதுண்டு.
கண்களே உண்மையை சொல்லும்!
ஒருவருடைய கண்களைப் பார்த்துப் பேசினாலே உண்மை தெரிந்துவிடும்’ என்று நம்மவர்கள் சொல்வதுண்டு. நெதர்லாந்து விஞ்ஞானிகள் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.Cuddle chemical என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளனர். இருவர் பேசிக்கொள்ளும்போது அங்கு மொழியைக்காட்டிலும்