Advertisements

Daily Archives: ஜூன் 4th, 2017

கழகங்கள்… பாதை மாறிய பயணங்கள்!

2017-ம் ஆண்டு இரு திராவிடக் கட்சிகளுக்கும் முக்கியமான ஆண்டு. காங்கிரஸ் என்ற தேசியக் கட்சியை வீழ்த்தி தி.மு.க ஆட்சியைப் பிடித்த 50-ம் ஆண்டு, கருணாநிதி சட்டமன்றத்துக்குள் நுழைந்த 60-ம் ஆண்டு, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு என்ற மூன்று முக்கியத்துவங்கள் இந்த ஆண்டுக்கு உண்டு. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஜெயலலிதா உயிருடன் இல்லை. கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா மேடையில் அமரும் நிலையில்  கருணாநிதி இல்லை. இப்படி ஒரு விழா நடைபெறுவதை உணரும் நிலையிலேயே அவர் இல்லை. காலம் விசித்திரமானதுதான்!

Continue reading →

Advertisements

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்துக்கு 10 விஷயங்கள்!

ந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது அவசியம் என்கிறோம். ஆனால், வாழ்வின் பெரும் நிகழ்வு, குழந்தை பெற்றுக்கொள்வது. அதைப் பற்றிய எந்த ஒரு திட்டமிடலும் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இருப்பதில்லை” என்று சுட்டிக்காட்டும் மதுரையைச் சேர்ந்த மனநல நிபுணர் கீதாஞ்சலி, குழந்தைப் பிறப்பை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது பற்றிக் கூறினார். 

1. கருத்தரித்தல் என்பது சாதாரணமான நிகழ்வல்ல. நல்ல சந்ததியை சமூகத்துக்கு அளிக்கும் பொறுப்பு அது. அதை நிறைவுடன் செய்ய, தம்பதி இருவரும் தேவையான உடல், மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

Continue reading →

இஞ்சியும் தேனும் இனிய மருந்து!

உணவே மருந்து என்று சொல்வதற்கு இஞ்சியும், பூண்டும் முக்கிய உதாரணம். இவை இரண்டும், உடலுக்கு எல்லா வகையிலும் இயற்கை மருந்தாக பயன்படுகின்றன. இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி
சாப்பிடுவது, ரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

Continue reading →

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!

இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து,  ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ,

Continue reading →