Daily Archives: ஜூன் 5th, 2017

டி.டி.வி.தினகரனை அதிரவைத்த ஒட்டுமொத்த அமைச்சர்கள்!

சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த அவசர ஆலோசனையைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர்.

Continue reading →

மெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்!

கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லாப் பட்டணமும் பாழ்!’’ என்றொரு பழமொழி உள்ளது. அந்த அளவுக்குக் கீரைகள் பயன்படுத்தும் நடைமுறை நம் மூதாதையர் காலத்தில் இருந்து நம்மோடு பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் சமீப காலமாக உணவு மற்றும் ஊட்டச்சத்து உலகில் கீரைகள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

Continue reading →

ஆல் நியூ மாருதி டிசையர் – மாற்றம் முன்னேற்றம்!

டிசையரை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் செடான் வடிவமாகத்தான் மாருதி சுஸூகி முதலில் அறிமுகப்படுத்தியது. ஆனால், இன்று ஸ்விஃப்ட் என்ற அடைமொழியையே உதறிவிட்டு, டிசையர் என்ற தனி அடையாளத்தோடு வளர்ந்திருப்பதுடன், மாதந்தோறும் சுமார் 16,500 கார்கள் விற்பனையாகும் அளவுக்கு இது மக்கள் காராக வளர்ந்து நிற்கிறது.

Continue reading →

பம்ப்அப்” அப்ளிகேஷன்

தனி ஒருவனை விட “நாங்க நாலு பேரு” என்பதுதான் மாஸ் ஹிட். உடற்பயிற்சிகளும் அப்படித்தான். தனியாகச் செய்வதை விடக் குழுவாகச் செய்தால் எளிது. ஆனால், அப்படி ஒரு பார்ட்னர் கிடைக்காமல் பணம் கட்டிவிட்டு ஜிம்முக்குப் போகாமல் விட்டவர்கள் பலர். அவர்களுக்காகவே ஆண்ட்ராய்டு தந்திருக்கும் அதிசயப் பரிசுதான் “பம்ப்அப்” அப்ளிகேஷன். 150 நாடுகளைச் சேர்ந்த 50 லட்சம் பேர் இந்த ஆப்பில் இருக்கிறார்கள். நடப்பது, ஓடுவது  தொடங்கிப் பளு தூக்குதல் வரை உற்சாகத்தையும் டிப்ஸ்களையும் அள்ளி வழங்குகிறது இந்த வொர்க் அவுட் கம்யூனிட்டி. உடனே டவுன்லோடு செய்யுங்கள். “நான் தனியாளு” இல்லை எனப் பன்ச் பேசிக்கொண்டே வொர்க் அவுட் பண்ணுங்கள்.
ஆண்ட்ராய்டு லிங்க்: https://play.google.com/store/apps/details?id=co.pumpup.app&hl=en

ஆப்பிள் லிங்க்: https://itunes.apple.com/ca/app/pumpup-health-fitness-community/id573070442?mt=8

எதற்கும் உண்டு எக்ஸ்பைரி!

காலாவதித் தேதி… இதை ஆங்கிலத்தில் ‘எக்ஸ்பைரி டேட்’ என்பார்கள். பால், மருந்து, மாத்திரைகளுக்கு இந்தக் காலாவதித் தேதி அவசியம். காலாவதியாகும் வரை பால் ஓர் உணவாகப் பயன்படும். உயிர் காக்கும் மருந்து காலாவதியானால், அது உயிரைக் காப்பதற்குப் பதில் உயிர்க்கொல்லியாக எதிர்வினையாற்றவும் வாய்ப்பிருக்கிறது.

Continue reading →

உடல், மன, கேச நலம் காக்கும், நோய்களைத் தடுக்கும்… சாம்பிராணி தூபம்!

சாம்பிராணி… வெள்ளிக்கிழமைகளில் வீட்டையே மணக்கச்செய்யும் இதன் வாசனை. இன்றைக்கும் பல ஊர்களில் கடை கடையாக, வீடு வீடாகப் போய் சாம்பிராணி தூபம் போடும் சாயபுகள் இருக்கிறார்கள். அதன் வாசனையும் புகையும் சூழலுக்கு இதம் தரும்; மனதை நிதானப்படுத்தும்; ஏதோ தீய சக்தி நாம் இருக்கும் இடத்தில் இருந்து விலகியதைப் போன்ற ஓர் உணர்வைத் தரும். யதார்த்தத்தில், சாம்பிராணி தூபமிடுதல், இன்றைய தலைமுறையினர்

Continue reading →