Advertisements

பீதி! பிளாஸ்டிக் அரிசி வரத்து அதிகரித்ததால் ஆந்திரா, தெலுங்கானாவில் குவியும் புகார்கள்

ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில், பிளாஸ்டிக் அரிசி விற்பனை அதிகரித்துள்ளதாக, போலீசில் புகார்கள் குவிந்து வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி, இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இந்த

மாநிலத்தின் பல பகுதிகளிலும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை அதிகரித்துள்ள தாக புகார் எழுந்துள்ளது. மீர்பேட்டை சேர்ந்த நபர் ஒருவர், போலீசில் அளித்த புகாரை அடுத்து, மாநில அரசு அதிகாரிகள், அரிசி விற்பனை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலத்தின் பல பகுதிகளிலும், இதே போன்ற புகார்கள் குவிந்து வருவதால், அதிகாரிகள் செய்வதறியாது விழி பிதுங்கியுள்ளனர். குறிப்பாக, இவ்வகை அரிசியில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்ட நபர்களுக்கு, வயிற்று வலி, உடல் வலி, வயிற்று போக்கு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதேபோல், டி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடக்கும், தெலுங்கானாவிலும், பல கடைகளில் இவ்வகை அரிசி விற்பனை அதிகரித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்தின் பல பிரியாணி கடைகளில், பிளாஸ்டிக் அரிசியில் சமைக்கப்பட்ட பிரி யாணிகளே, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த,

பல தகவல்கள், சமூக வலைதளங் களில் வேகமாக பரவி வருகின்றன.

உத்தரகண்டிலும் ‘ஜோர்!’

பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான ஆட்சி நடக்கும், உத்தரகண்ட் மாநிலத்தில், பெரும்பாலான கடை களில் வெளிப் படையாகவே, பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடப்ப தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிளாஸ்டிக் அரிசி யால் உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்படு வதாக,பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள, ஹல்டிவாணி மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தை, பந்து போல உருட்டி, சிறுவர்கள் விளையாடும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இவ்வகை அரிசிகள் முதலில், வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட தாகவும், தற்போது, தென் மாநிலங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளதால், இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘வதந்தி பரப்பாதீங்க!’

ஆந்திர மாநில போலீசார் மற்றும் உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தின் சில பகுதிகளில் இது போன்ற புகார் எழுந்துள்ளது. புகார் எழுந்துள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளோம். சந்தேகத்திற் குரிய வகையிலான அரிசி வகைகளின் மாதிரிகள் கைப்பற்றப்பட்டு, சோதனைக்கு அனுப்பி வைத்துள் ளோம்.பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தேவையின்றி பீதியடையவேண்டாம்; சமூக வலைதளங்களில் வதந்தி களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கி றோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிளாஸ்டிக் அரிசி என்றால் என்ன?

தரமற்ற தானியங்கள், மாவு வகைகளுடன், ரசாயனத்தையும் சேர்த்து, அசல் அரிசியைப் போல், பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது. சீனா மற்றும் வியட்னாம் நாடுகள் தான், பிளாஸ்டிக் அரிசி உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. வட கொரியாவில், மக்காச்சோளத்தில் இருந்து, ‘பிளாஸ்டிக் கார்ன்’ அரிசி தயாரிக்கப்படுகிறது. சீனாவில் இருந்து, 2016 டிசம்பரில், இறக்குமதி செய்யப்பட்ட, 2.50 டன் பிளாஸ்டிக் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட செய்தி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிப்புகள் என்ன?

‘சுக்ரா டயாபடிக்’ மைய இயக்குனரும், பொது நல மருத்துவருமான, கே.பரணிதரன் கூறிய தாவது:பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டவுடன் வயிற்று வலி, வாந்தி வருவதாக சிலர் கூறு கின்றனர். பிளாஸ்டிக் என்பது, ஜீரண மண்டலத் துக்கு எந்த விதத்திலும், தொடர்பு இல்லாத பொருள். அதனால், செரிமானம் செய்ய, ஜீரண மண்டலம் சிரமப்படும்; அது, அதிகமாக வேலை செய்யும்போது ஏற்படும் ரத்த ஓட்டத்தால் அயர்ச்சி, சோர்வு போன்ற பிரச்னைகள் வரலாம்.
ஒவ்வொரு வயதினரின் உடல் நிலையும், ஒவ்வொரு விதமாக இருக்கும். குழந்தைகள் என்றால், அவர்களுக்கு செரிமான சக்தி குறைவு;வயதானோருக்கு மலசிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் இருக்கும். பிளாஸ்டிக் அரிசி, அந்த பிரச்னையை மேலும் அதிகப்படுத்தும். தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டால், செரிமான கோளாறு கள் அதிகமாகி, சர்க்கரை நோய் போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளும் அதிகமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements
%d bloggers like this: