Daily Archives: ஜூன் 9th, 2017

துரோகி -நக்கீரன் 7.6.2017

துரோகி -நக்கீரன் 7.6.2017

Continue reading →

ஆட்சியைக் கலைக்கவும் தயங்க மாட்டேன்!’ – எம்.எல்.ஏக்களிடம் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலை மனதில் வைத்து ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். ‘எங்கள் ஆதரவை பா.ஜ.க நேரில் வந்து கேட்கட்டும்’ என வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர் அவர் ஆதரவு எம்.எல்.ஏக்கள். இந்த ஆட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ரசிக்கவில்லை. ‘என்னுடைய தயவில்தான் ஆட்சி நீடிக்கிறது. இதை நினைவில் வைத்துக்கொண்டு பேசுங்கள்’ என எம்.எல்.ஏக்களை அவர் எச்சரித்திருக்கிறார்.

Continue reading →

இரவில் உறக்கம் தவிர்த்தால் வரும் இதய நோய்!

இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில்தான் மிக அதிகம் என்கிறது, உலக சுகாதார மைய அறிக்கை. ஆனால் இது பற்றிய விழிப்புணர்வோ, அக்கறையோ இன்னும் முழுமையாக யாருக்கும் இல்லை. நம் உறவினர்களுக்கே கூட இதய நோய் வந்தால், அலட்சியமாகவும் அசட்டையாகவும் இருந்து விடுகிறோம். வலியை உணரும்போதுதான் பலரும் விழித்துக்கொள்கிறோம்.

Continue reading →

எலுமிச்சம் பழத்தின் ஆரோக்கிய ரகசியம்!

எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில், நல்ல மருந்து பொருளாக பயன்படுகிறது. ஒரு முழு எலுமிச்சை பழத்தை, சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் கலந்து, நாள் முழுவதும் கொஞ்சம், கொஞ்சமாக குடித்து வந்தால், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும்.

Continue reading →

ஃபைப்ரோமையால்ஜியா – இது ‘மகளிர் மட்டும்’ வலி

பிளாட்பாரத்துக்குப் போய் டிக்கெட் எடுத்துட்டேன் டாக்டர். நான் வழக்கமாகப் போகும் டிரெயின்தான். ஆனால், எந்தத் திசையில் போகணும், நான் எங்கே இருக்கேன் என எல்லாமே கொஞ்ச நேரத்துக்கு மறந்துபோச்சு. உடம்பு வலி ஒருபுறம் வாட்ட, அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பிச்சுட்டேன்.” – ஓர் இளம் பெண், மருத்துவரிடம் பகிர்ந்த வார்த்தைகளே இவை.

Continue reading →

வயிற்று புண் போக்கும் மங்குஸ்தான் பழம்!

பழங்களின் ராணி’ என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம், மருத்துவ குணம் வாய்ந்தது. தென்னிந்திய மலைப்பகுதியில், தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.

Continue reading →

நல்லெண்ணம் நல்லதையே செய்யும்!

நல்லவர்களின் வார்த்தைக்கு தெய்வமே செவிசாய்க்கும் என்பதற்கு உதாரணமான கதை இது:
வட மதுரையில், அரிவியாசர் எனும் பக்தர் வாழ்ந்து வந்தார். அன்பையும், அகிம்சையையும் போதிக்கும் அவரின் மனமும், நாவும் எப்போதும் நாராயண நாமத்தையே உச்சரிக்கும்.
ஒரு சமயம், அரிவியாசருக்கு, பூரி ஜகந்நாதம் சென்று, பகவானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அதன்படி, வட மதுரையிலிருந்து, ஜகந்நாதம் புறப்பட்டார்.
வழியில், ஒரு அழகான சோலை தென்பட, அதன், நடுவில், காளி கோவில் இருந்தது. நடந்த களைப்பு தீர, கோவில் மண்டபத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தவர், பின், அப்படியே, நாராயணனை உள்ளத்தில் தியானித்தபடி, பக்தியில் ஆழ்ந்து விட்டார். திடீரென, ஏதோ ஒரு ஓசை கேட்க, திடுக்கிட்டு, திரும்பி பார்த்தார்.
அங்கே, ஒருவர், ஆட்டை, ‘தரதர’ வென இழுத்து வந்து, காளி கோவிலில் பலி கொடுத்தார். ஆடு, துடிதுடித்து இறந்தது. இதைப் பார்த்த அரிவியாசருக்கு, உடலும், உள்ளமும் பதை பதைத்தது.
‘அமைதியும், அழகும் நிறைந்த இடத்தில் ஆபத்து இருக்கும் என்பர்; அதற்கேற்றாற் போல், இனிமையான இந்த இடத்தில், இவ்வளவு கொடுமையா… இனிமேல் இங்கிருக்க கூடாது…’ என்று எண்ணி, அங்கிருந்து புறப்பட்டார், அரிவியாசர்.
அப்போது, விக்கிரகத்திலிருந்து வெளிப்பட்ட காளி, ‘அரிவியாசா… என் ஆலயத்தில் வந்து தங்கியிருந்த நீ, பசியோடு செல்வதா… வா, நான் உனக்கு உணவிடுகிறேன்; பசியாறி போ…’ என்றாள்.
‘தாயே… கருணை பெருக்கெடுத்து ஓடும் உன் சன்னிதியில், உதிர வெள்ளம் ஓடலாமா… அதை, நீ ஏற்கலாமா… இன்று முதல், நீ உயிர்ப்பலி விரும்பாதிருந்தால், நீ அளிக்கும் உணவை நான் ஏற்கிறேன்; இல்லையேல், பசியோடு போகிறேன்…’ என்றார், அரிவியாசர்.
உத்தம பக்தனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, ‘அரிவியாசா… உன் விருப்பம் நிறைவேறும்; இனி, நான் உயிர் பலி ஏற்க மாட்டேன்; வந்து பசியாறிச் செல்…’ என்றார், காளிதேவி.
அத்துடன், அந்நாட்டு அரசர் கனவில் காட்சியளித்து, ‘மன்னா… இன்று முதல், என் சன்னிதியில் உயிர்க்கொலை கூடாது…’ எனக் கூறி, எச்சரித்தாள். அதன்படியே, மன்னரும் பறையறிவித்து, காளியின் கட்டளையை தெரியப்படுத்தி, உயிர் பலியைத் தடுத்தார். மேலும், அரிவியாசரிடம் வந்து, அவரை வணங்கி, நல்லருள் பெற்றார்; பின், ஜகந்நாதம் சென்று, பகவானை தரிசித்தார், அரிவியாசர்.
தன் சொற்படி, தெய்வங்களையே செயல்பட வைத்த, அருளாளர்கள் நிறைந்த பூமி இது!